Sep 11, 2026 - 07:12 PM

நாளை (12) செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையத்தினால் வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருணாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான 'வெப்பச் சுட்டெண்' (Heat Index) "அவதானம் செலுத்தப்பட வேண்டிய" மட்டத்தில் காணப்படலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





























