Sep 12, 2026 - 06:31 PM

பதுளை - மஹியங்கனை வீதியில், மடித்தலை பகுதியில் வீடு ஒன்றின் மீது லொறி ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் வீட்டில் இருந்த தந்தையும் அவரது மகனும், அத்துடன் லொறியின் சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளையிலிருந்து மஹியங்கனை நோக்கிச் சென்ற குறித்த லொறியின் பிரேக் தொழிற்படாமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லொறி விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீதும் மோதியதுடன், பின்னர் சுமார் 75 அடி பள்ளத்தில் இருந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வீடு ஒன்றின் மீது கவிழ்ந்துள்ளது.
இவ்விபத்து குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





























