Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
இரு குழந்தைகளின் உயிரைப் பறித்த கைக்குண்டுத் தாக்குதல் - ஐ.நா கவலை

Sep 12, 2026 - 06:50 PM

இரு குழந்தைகளின் உயிரைப் பறித்த கைக்குண்டுத் தாக்குதல்  - ஐ.நா கவலை
Mobitel Inner 1278

தெஹிவளை பகுதியில் கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.

 

ஐக்கிய நாடுகள் சபையின் இந்நாட்டின் வதிவிட இணைப்பாளர் மார்க் என்ட்ரே குறிப்பிடுகையில், இரண்டு குழந்தைகளின் உயிரைப் பறித்த அந்தச் சம்பவம் தன்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகத் தெரிவித்தார்.

 

இது போன்ற வன்செயல்களுடன் தொடர்புடைய தரப்பினர் அதற்குப் பதிலளிக்க வேண்டும் என அவர் தனது எக்ஸ் (X) கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுக் குறிப்பிட்டுள்ளார்.

 

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (11) அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், அவ்வீட்டில் இருந்த இரு குழந்தைகள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை படுகாயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

 

தாக்குதலைத் நடத்துவதற்காகச் சந்தேக நபர்கள் வந்ததாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி நேற்று பாதுக்கை, கீழ் போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட போதிலும், சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

 

இதனிடையே, இந்தக் குண்டுத் தாக்குதல் இலக்கு மாறித் தாக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 

தாக்குதலுக்கு இலக்காகித் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும், உயிரிழந்த இரு குழந்தைகளின் தந்தையின் சகோதரரின் வீட்டை இலக்கு வைத்தே குறித்த குண்டுத் தாக்குதலை நடத்தக் குற்றவாளிகள் வந்துள்ளதாகவும், வீடு மாறியதன் காரணமாகவே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 

சம்பவத்தில் உயிரிழந்த இரு குழந்தைகளின் உடல்கள் இன்று (12) பிற்பகலில் அவர்களின் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு எடுத்துவரப்பட்டதாக அதிகாலை அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

Mobitel 1278