Sep 14, 2026 - 12:49 PM

காலத்தால் அழியாத கண்டி எசல பெரஹெராவின் ஒரு மாலைப் பொழுதில் இடம்பெற்ற கண்கவர் நிகழ்வொன்று செலிங்கோ லைஃப்பின் மிகவும் கௌரவமிக்க காப்புறுதிதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினருக்கு மிகவும் அற்புதமான அனுபவத்தை வழங்குவதாக அமைந்தது. நிறுவனத்தின் வாடிக்கையாளர் தொடர்புகள் பிரிவினால் அவர்களுக்கு நிகழ்வினை பிரத்தியேக பார்த்து ரசிக்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
கண்டியின் கிங்ஸ் வீதியில் அமைந்துள்ள செலிங்கோ லைஃப் கண்டி கிளையில் நடைபெற்ற இந்த வருடாந்த நிகழ்வு, இரண்டாவது ரந்தோலி பெரஹெராவுடன் ஒரே நேரத்தில் இடம்பெற்றது. இதன் மூலம் விருந்தினர்கள் இலங்கையின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் அணிவகுப்பு சிறப்பின் மிகக் கண்கவர் வெளிப்பாடுகளிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கண்டியின் வீதிகள் வழியாக ஊர்வலம் கம்பீரமாகச் சென்றபோது, விருந்தினர்கள் சிறப்பான பார்வையிடும் இடத்தில் VIP இருக்கை வசதியை அனுபவித்தனர், இதன் மூலம் பெரஹெராவின் வண்ணம், அசைவு மற்றும் பிரம்மாண்டத்தை மிக அருகில் இருந்து அனுபவிக்க முடிந்தது. செலிங்கோ லைஃப் தனது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுடனான நீடித்த உறவுகளை கொண்டாடுவதற்கு இந்த மாலைப் பொழுது மிகவும் பொருத்தமான சூழலை வழங்கியது.
இந்த அனுபவம் வெளியில் நடைபெற்ற காட்சியைக் கடந்தும் நீண்டது. விருந்தினர்கள் மாலை நேர சிற்றுண்டிகளுடன் வரவேற்கப்பட்டதுடன், ஏற்கனவே நினைவில் நிற்கும் அந்த மாலைக்கு சிறந்த உணவு அனுபவத்தையும் சேர்க்கும் வகையில், புகழ்பெற்ற Amaya Hills Resort வழங்கிய பிரத்தியேக இரவு உணவு பஃபேவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குடும்பங்களும் இந்த நிகழ்வின் மையமாக இருந்தன. தனியார் திரைப்பட அரங்க அனுபவம் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஒருசேர பொழுதுபோக்கை வழங்கியது, அதேவேளையில் பங்கேற்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும் அழகாகச் சட்டமிடப்பட்ட குடும்பப் புகைப்படம் தனிப்பயனாக்கப்பட்ட நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது, இது இலங்கையின் மிகவும் போற்றப்படும் கலாசார மரபுகளின் பின்னணியில் ஒன்றாகப் பகிர்ந்துகொண்ட ஒரு மாலையின் நெகிழ்ச்சியான நினைவாக அமைந்தது.





























