Sep 14, 2026 - 01:06 PM

அச்சுவேலி புத்தூர் பகுதியில் 74 வயதுடைய வயோதிப் பெண் ஒருவர் கதவுக்கு வைக்கப்படும் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் மேற்கு சிவன் கோவில் வீதியிலுள்ள பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
வயோதிப தாயும், அவரது மகனும் வாழ்ந்து வந்த நிலையில் மகனின் மகனால் குறித்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





























