Sep 14, 2026 - 01:04 PM

மிஸ் கிராண்ட் ஸ்ரீலங்கா 2026 போட்டியின் உத்தியோகபூர்வ நறுமண பங்காளராக (Fragrance Partner) இணைந்து தனது ‘Be the Champion’ எனும் சம்பியன் மனப்பான்மையை ‘Beverly Hills Polo Club - BHPC’ (பவர்லி ஹில்ஸ் போலோ கிளப்) போட்டியாளர்களிடையே கொண்டு சேர்த்துள்ளது. ஓகஸ்ட் 31ஆம் திகதி கொழும்பு சின்னமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெற்ற பிரமாண்டமான இறுதிப் போட்டியில் நெதக்கி லொக்குகமகே மிஸ் கிராண்ட் ஸ்ரீலங்காவாக மகுடம் சூடப்பட்ட வரை, இப்போட்டியாளர்களின் திறமை மற்றும் சிறப்பம்சங்களுக்கான பயணத்தில் BHPC தொடர்ச்சியாகப் பயணித்துள்ளது.
போட்டியாளர்களுக்கு அர்த்தமுள்ள அனுபவத்தை உருவாக்குவதோடு, நறுமணத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் இடையிலான தொடர்பை முன்னிலைப்படுத்தும் நோக்குடன், Model with Ruki Academy இன் மிஸ் கிராண்ட் ஸ்ரீலங்காவின் தேசிய பணிப்பாளர் ருக்மால் சேனாநாயக்க மற்றும் தேசிய ஏற்பாட்டாளர் தாரக குருகந்த ஆகியோரின் ஒத்துழைப்புடன் மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த கூட்டணி ஆரம்பமானது.
இந்த போட்டித் தொடர் முழுவதும், நேர்முகத் தெரிவு (Audition), தேசிய உடை, திறமை மற்றும் ஆளுமைச் சுற்றுகள் என அனைத்து முக்கிய கட்டங்களிலும் Beverly Hills Polo Club தனது வலுவான இருப்பை பேணியுள்ளது. நறுமணப் பங்காளி எனும் பங்கிற்கு அப்பால், நறுமணங்களின் கலை மற்றும் விஞ்ஞானம் எனும் பட்டறைகள் மூலம் ஒரு பிரத்தியேக அழகுபடுத்தல் அம்சத்தையும் இவ்வர்த்தகநாமம் அறிமுகப்படுத்தியது. இது போட்டியாளர்களின் தனிப்பட்ட ஆளுமையை மேம்படுத்தவும், உண்மையான சம்பியன் மனப்பான்மையை வளர்க்கும் வகையில் அவர்களின் தன்னம்பிக்கையை வடிவமைக்கவும் உதவியது.
இந்த பிரமாண்ட இறுதிப் போட்டியானது, Beverly Hills Polo Club இன் உலகளாவிய விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் சிரேஷ்ட பிரதித் தலைவர் Damyan Misirdzhiev இன் முதன்முறை இலங்கைக்கான வருகையைக் குறித்து நின்றதோடு, நிறுவனத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இந்த வாழ்க்கை முறைமை கொண்டாட்டத்தின் உச்ச கட்டத்தைக் காண அவர் ஏனைய பிரதிநிதிகளுடன் இணைந்தமையானது, இந்தப் பங்களிப்பின் முக்கியத்துவத்தை மேலும் எடுத்துக் காட்டியது.
இது குறித்து, Beverly Hills Polo Club அமைப்பின் உலகளாவிய விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் சிரேஷ்ட பிரதித் தலைவர் Damyan Misirdzhiev தெரிவிக்கையில், எமது வர்த்தகநாமம் இயல்பான வாழ்க்கை முறையைச் சார்ந்ததாகும். அது இந்த நிகழ்வோடு சிறப்பாக பொருந்துகிறது. ஏனெனில் இது நறுமணத்தை தன்னம்பிக்கை, தனித்துவம் மற்றும் தனிப்பட்ட வெளிப்பாட்டோடு இணைத்து இளைஞர்களை ஊக்குவிக்கும் ஒன்றாகும். என்றார்.
பிரமாண்ட இறுதிப் போட்டிக் கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாக, சர்வதேச ரீதியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நெதக்கி லொக்குகமகேவிற்கு, Beverly Hills Polo Club இன் ஒரு வருடத்திற்கான நறுமணப் பொருட்களை வழங்கி வர்த்தகநாமம் கௌரவித்தது. TruVic Consumer நிறுவனத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் Beverly Hills Polo Club, தனது Prestige வாசனைத் திரவிய வகைகளின் அறிமுகத்தின் மூலம் இலங்கையில் தனது இருப்பை வலுப்படுத்தி வரும் நிலையில் இந்த அனுசரணை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து. TruVic Consumer (Pvt) Ltd. நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி டி கூஞ்ஞ தெரிவிக்கையில், மிஸ் கிராண்ட் ஸ்ரீலங்கா போட்டியானது, Beverly Hills Polo Club இன் Be the Champion தத்துவத்திற்கு உயிர் கொடுக்கவும், தன்னம்பிக்கை மற்றும் சுய வெளிப்பாட்டுடன் நறுமணத்தை இணைக்கவும் எமக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. போட்டியாளர்களுக்கு ஆதரவளிப்பதிலும், வர்த்தகநாமத்தின் இருப்பை வலுப்படுத்துவதிலும் நாம் மகிழ்ச்சியடைகிறோம். என்றார்.
இந்நிகழ்வானது Beverly Hills Polo Club இன் Prestige வாசனைத் திரவிய வகைகளை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதையும் குறித்து நின்றது. மிஸ் கிராண்ட் ஸ்ரீலங்கா 2026 போட்டியின் போது அறிமுகப்படுத்தப்பட்ட இவை, அதிநவீன நறுமணங்களை நவீன ஈர்ப்புடன் இணைத்து, வர்த்தகநாமத்தின் அதிகரித்து வரும் வாசனைத் திரவிய தயாரிப்புகளுக்கு ஒரு உயர்ரக பரிமாணத்தை சேர்க்கிறது. இது நாடு முழுவதிலும் உள்ள தெரிவு செய்யப்பட்ட விற்பனைப் பங்காளிகள் மற்றும் விற்பனை நிலையங்களிடமிருந்து கிடைக்கிறது.
மிஸ் கிராண்ட் ஸ்ரீலங்கா 2026 இன் கொண்டாட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட Beverly Hills Polo Club இன் ‘Prestige’ வகை உயர்ரக, அதிநவீன உயர் மட்டத்திலுள்ள இலக்கு வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டு, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தலா நான்கு தனித்துவமான வகைகளை வழங்குகின்றது. நேர்த்தியான நறுமண கட்டமைப்புகள், உறுதியான தன்மை மற்றும் நவீன ஈர்ப்புடன் கூடிய இந்த Prestige Range ஆனது, BHPC இன் வாசனைத் திரவிய வகைகளின் உயர்மட்ட வெளிப்பாடாக அமைவதுடன், தன்னம்பிக்கை, நேர்த்தி மற்றும் சம்பியனாகத் திகழும் மனப்பான்மையைப் பிரதிபலிக்கிறது.





























