Sep 14, 2026 - 05:26 PM

இரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மொத ராத்திரி’. மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
திருமணத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து நகைச்சுவை கலந்த எமோஷனல் கதைக்களத்துடன் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. 3 கோடி ரூபா பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்தப் படம் 10 கோடி ரூபா வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய படங்கள் ரிலீஸானாலும், ‘மொத ராத்தி’ படத்துக்கான மவுசு குறையவில்லை. பெரிய அளவில் புரமோஷன் இல்லாமல், பாசிட்டிவ் விமர்சனங்களால் வசூலையும், வரவேற்பையும் பெற்ற இந்தப் படம் வரும் செப்.18 ஆம் திகதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இருப்பினும், அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.





























