Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
முதல் 100 கோடியை நோக்கி சூரி!

Sep 15, 2026 - 04:16 PM

முதல் 100 கோடியை நோக்கி சூரி!
Mobitel Inner 1278

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை 1 திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சூரி, தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் எல்லோரையும் கவர்ந்தார். அதைத்தொடர்ந்து அடுத்தடுத்து வெளியான கருடன், கொட்டுக்காளி திரைப்படங்களில் தான் ஏற்ற கதாபாத்திரமாகவே மாறிப்போன சூரி, தன்னுடைய காமெடியன் பிம்பத்தை உடைத்து தன்னால் இப்படியான ரோல்களிலும் நடிக்க முடியும் என்று காண்பித்தார். 

அதன்பிறகு வெளியான மாமன் திரைப்படம் அவரால் வணிக ரீதியிலான வெற்றியை கொடுக்கமுடியும் என்று நிரூபித்தது. அதன்பிறகு தற்போது வெளியாகியிருக்கும் மண்டாடி திரைப்படம், அவரை 100 கோடி வசூல் கொடுக்ககூடிய ஒரு கதாநாயகனாக மாற்றியுள்ளது. 

மதிமாறன் இயக்கத்தில் சூரியின் நடிப்பில் வெளிவந்திருக்கும் மண்டாடி திரைப்படம், மீனவர்களின் வாழ்க்கையையும் அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப்போட்டியையும் மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சூரியுடன் மகிமா, சுஹாஸ், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

விறுவிறுப்பான திரைக்கதை, பின்னணி இசை, கேமரா ஒர்க் என அனைத்தும் ஒன்று சேர்ந்து அக்கடல் பயணத்திலிருந்து நம்மை வெளிவராதபடி கட்டிப்போடுகின்றன. ஒரு ரம்மியமான திரை அனுபவத்தை கொடுக்கும் மண்டாடி வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. 

கடந்த 10 ஆம் திகதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான மண்டாடி திரைப்படம், 5 நாளில் 65 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

முதல் நாளில் வசூல் குறைவாக இருந்தாலும், அதற்குபிறகு பாசிட்டிவான விமர்சனங்களை பெற்ற மண்டாடி திரைப்படம் வசூலில் ஏறுமுகத்தையே பெற்றுவருகிறது. அதுமட்டுமில்லாமல் தியேட்டர்களுக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

குடும்பங்களோடு பார்க்ககூடிய படம் என்பதால் வரும் வார இறுதியில் 100 கோடி வசூலை நெருங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒருவேளை 100 கோடி வசூலை கடந்தால் இது சூரியின் திரைவாழ்க்கையில் முதல் 100 கோடி வசூலை ஈட்டும் திரைப்படமாக மாறும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

Mobitel 1278