Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
சர்வதேச வர்த்தக மேடையில் வரலாற்றுச் சாதனை படைக்கும் இலங்கையர்: The 3i Show நிகழ்ச்சியில் பில்லியன் டொலர் கோடீஸ்வரரான தொழில்நுட்ப ஜாம்பவான் ஜெஃப் ஹோஃப

Sep 15, 2026 - 05:35 PM

 சர்வதேச வர்த்தக மேடையில் வரலாற்றுச் சாதனை படைக்கும் இலங்கையர்: The 3i Show நிகழ்ச்சியில் பில்லியன் டொலர் கோடீஸ்வரரான தொழில்நுட்ப ஜாம்பவான் ஜெஃப் ஹோஃப
Mobitel Inner 1278

சர்வதேச ரீதியாக அதிக கவனத்தை இலங்கை பெற்று வரும் நிலையில், Priceline/Booking.com நிறுவனத்தின் இணை நிறுவுனர் Jeff Hoffman உடன் முதலாவது உலகளாவிய வணிக உரையாடலை முன்னெடுத்து, இலங்கை பார்வையாளர்களை உலகளாவிய தொழில்முனைவு சிந்தனையுடன் Stefan de Alwis இணைக்கிறார். 

இலங்கையின் வணிக ஊடகங்கள் மற்றும் தொழில்முனைவோர் தலைமைத்துவத்திற்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய மைல்கல்லாக, இலங்கைத் தொழில்முனைவோரும் வணிகத் தொடர்பாளருமான ஸ்டீபன் டி அல்விஸ், உலகப் புகழ்பெற்ற தொழில்முனைவுனரும், முதலீட்டாளரும் வழிகாட்டியுமான ஜெஃப் ஹோஃப்மனுடன் 'The 3i Show மூலம் பிரத்தியேகமான, சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் உரையாடலை நடத்தி, இலங்கையை சர்வதேச வரைபடத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளார். 

உள்நாட்டுத் தளமொன்று உலகின் மிகவும் முக்கிய வணிகத் தலைவர்களுடன் நேரடியாக இணைந்து, உள்ளூர் இலட்சியங்களுக்கும் பில்லியன் டொலர் மதிப்புடைய உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் ஒரு முக்கிய தருணமாக இந்த நேர்காணல் அமைகிறது. தொழில்முனைவு, முதலீடு மற்றும் புத்தாக்கம் பற்றிய சர்வதேச உரையாடல்களில் இலங்கை அதிக ஈர்ப்பைப் பெற்று வரும் ஒரு முக்கிய கட்டத்தில் இந்த ஊடக நேர்காணல் இடம்பெறுகிறது. ஜெஃப் ஹோஃப்மன் தற்போது இலங்கையின் வணிக மற்றும் பொருளாதார சூழலில் தொடர்பை ஏற்படுத்தி வருகிறார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, இந்நாட்டின் தொழில்முனைவோர் சூழலுடன் இணைந்து செயற்படவும், அதன் தொடர்ச்சியாக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பங்களிப்பதற்கான வழிகளை ஆராயவும் அரசாங்கத்திடமிருந்து உத்தியோகபூர்வ அழைப்பை அவர் பெற்றார். உயர் மதிப்புமிக்க முதலீடுகள், தொழில்முனைவு மற்றும் புத்தாக்கங்ளுக்கான அதிகரித்து வரும் இடமாக தனது நிலையை வலுப்படுத்த இலங்கை தீவிரமாக செயற்பட்டு வரும் நேரத்தில், அவரது வருகையும் ஈடுபாடும் நாட்டின் பொருளாதாரப் பாதைக்கு ஒரு முக்கிய சர்வதேச பார்வையை கொண்டு வருகின்றன. 

இந்த பின்னணியில், ஜெஃப் ஹோஃப்மனை 'The 3i Show' நிகழ்ச்சிக்கு அழைத்து வந்த ஸ்டீபன் டி அல்விஸின் முயற்சியானது, ஒரு இலங்கை வணிகத் தளத்தின் முக்கிய சாதனையாகும். இது உலகளாவிய விடயங்களுடன் தொடர்புடைய உரையாடல்களை இலங்கையின் உள்ளடக்க உருவாக்குனர்கள் மற்றும் நேர்காணல் மேற்கொள்வோரால் ஆரம்பித்து நடத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளது. 

இது குறித்து. 'The 3i Show' நிகழ்ச்சியின் இணை நிறுவுனரும் தொகுப்பாளருமான ஸ்டீபன் டி அல்விஸ் தெரிவிக்கையில், "இந்த உரையாடலானது, எனக்கு எதிரே அமர்ந்திருக்கும் நபரின் காரணமாக மட்டுமன்றி, இலங்கைக்கும் இது எவ்வாறான அர்த்தத்தை வழங்குகிறது என்பதிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது. பல பில்லியன் டொலர் மதிப்புடைய உலகளாவிய நிறுவனங்களை உருவாக்கி விரிவுபடுத்திய ஒருவரின் கருத்தை எமது பார்வையாளர்கள் நேரடியாகக் கேட்க இந்த உரையாடல் உதவுகிறது. இலங்கையிலிருந்து வரலாற்றைப் படைக்கும் வகையில் 'The 3i Show' நிகழ்ச்சியை உருவாக்க நான் முனைந்தேன். உள்நாட்டில் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களுக்கும் உலகளாவிய அரங்கிற்கும் இடையில் ஒரு செயற்பாட்டு பாலமாக இது செயற்படுகிறது." என்றார். 

Booking.com போன்ற வர்த்தகநாமங்களின் பின்னணியில் உள்ள உலகளாவிய பயண தொழில்நுட்ப நிறுவனமாக வளர்ந்த Priceline (Booking Holdings) இன் இணை நிறுவுனராக அறியப்படும் ஜெஃப் ஹோஃப்மன், தொழில்முனைவு, தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி குறித்த சர்வதேச உரையாடல்களில் அடிக்கடி பங்கேற்று வருகிறார். 

ஸ்டீபன் டி அல்விஸ் மற்றும் ஜெஃப் ஹோஃப்மன் ஆகியோர் தற்காலிக தொழில்நுட்பப் போக்குகளை எது நிலைபேறான உலகளாவிய நிறுவனங்களிலிருந்து பிரிக்கிறது, வளர்ந்து வரும் சந்தைகளில் இருந்து விரிவுபடுத்துவதற்கு தேவையான ஒழுக்கமான செயலாக்கம் மற்றும் உள்ளூர் புத்தாக்க முயற்சியாளர்கள் எவ்வாறு சர்வதேச மூலதனத்தைப் பெற முடியும் என்பதை தங்களது பரந்த உரையாடலில் ஆராய்ந்துள்ளனர். 'The 3i Show' மற்றும் ஜெஃப் ஹோஃப்மனுடனான இந்த உரையாடல், இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் புத்தாக்க திறன் குறித்த அதிகரித்து வரும் சர்வதேச ஆர்வத்தின் ஒரு முக்கிய அளவுகோலாக அமைகிறது. 

ஸ்டீபன் டி அல்விஸைப் பொறுத்தவரை, இந்த உரையாடலானது 'The 3i Show' நிகழ்ச்சி கொண்டுள்ள பரந்த நோக்கம் கொண்ட பணியை இது பிரதிபலிக்கிறது. அதாவது, இலங்கையிலிருந்து ஒரு உயர் தாக்கத்தை ஏற்படுத்தும் தளத்தை உருவாக்குதல், அதற்கு சர்வதேச அரங்கில் நிரந்தர இருப்பை நிறுவுதல், உள்ளூர் திறனை ஆதரித்தல், இலங்கைக் குரல்கள் உலகளாவிய விளைவுகளின் உரையாடல்களை வடிவமைக்க முடியும் என்பதை நிரூபித்தல் ஆகியனவே அவையாகும். 

ஜெஃப் ஹோஃப்மன் பங்குபெறும் 'The 3i Show' நிகழ்ச்சியின் முழுமையான அத்தியாயத்தை தற்போது YouTube இல் உலகளாவிய ரீதியில் பார்வையிட முடியும்: "He Co-Founded the $140 Billion Company Behind Booking.com – Why 90% of AI Will Die | Jeff Hoffman". அத்துடன் முக்கிய டிஜிட்டல் ஒடியோ தளங்களிலும் அதனை கேட்கலாம். 

இந்த கலந்துரையாடல் உலகளாவியது. தாக்கம் இலங்கைக்குரியது. 

The 3i Show பற்றி 

ஸ்டீபன் டி அல்விஸ் தொகுத்து வழங்கும் 'The 3i Show' ஆனது, இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழில்முனைவோர், நிறுவுனர்கள், முதலீட்டாளர்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் செல்வாக்குமிக்க குரல்களுடனான உரையாடல்களில் கவனம் செலுத்தும் ஒரு வணிக மற்றும் தொழில்முனைவோர் தளமாகும். இந்தத் தளம் வணிக வெற்றிகளுக்குப் பின்னால் உள்ள அனுபவங்கள், யோசனைகள், பாடங்களை ஆராய்கிறது. இதன் நோக்கம் அர்த்தமுள்ள நுண்ணறிவுகளை பரந்த பார்வையாளர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றுவதும், அடுத்த தலைமுறை தொழில்முனைவோரை ஊக்குவிப்பதுமாகும். 

இணையத்தளம்: https://www.stefandealwis.com 

ஸ்டீபன் டி அல்விஸ் பற்றி 

ஸ்டீபன் டி அல்விஸ், இலங்கை பார்வையாளர்களை உலகளாவிய வணிகம் மற்றும் தொழில்முனைவோர் சமூகத்தின் செல்வாக்குமிக்க குரல்களுடன் இணைக்க உருவாக்கப்பட்ட ஒரு தளமான 'The 3i Show' நிகழ்ச்சியின் இணை நிறுவுனரும் தொகுப்பாளரும் ஆவார். தனது நேர்காணல்கள் மற்றும் உரையாடல்கள் மூலம், சர்வதேச வணிக அறிவை மேலும் அணுகக்கூடியதாக மாற்ற ஸ்டீபன் டி அல்விஸ் முயல்கிறார். அதே வேளையில் நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலுள்ள யோசனைகள் மற்றும் அனுபவங்களுடன் இலங்கை பார்வையாளர்கள் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளையும் அவர் உருவாக்குகிறார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ
04
ISC Education நிறுவனத்தின் ஐந்தாவது வருடாந்த பெலாரஸ் ஒன்றுகூடல் – மாணவர்கள், குடும்பங்கள் மற்றும் வளர்ந்து வரும் மருத்துவ சமூகத்தைக் கொண்டாடும் நிகழ்வ

ISC Education நிறுவனத்தின் ஐந்தாவது வருடாந்த பெலாரஸ் ஒன்றுகூடல் – மாணவர்கள், குடும்பங்கள் மற்றும் வளர்ந்து வரும் மருத்துவ சமூகத்தைக் கொண்டாடும் நிகழ்வ

Sep 15, 2026 - 05:40 PM

05
 சர்வதேச வர்த்தக மேடையில் வரலாற்றுச் சாதனை படைக்கும் இலங்கையர்: The 3i Show நிகழ்ச்சியில் பில்லியன் டொலர் கோடீஸ்வரரான தொழில்நுட்ப ஜாம்பவான் ஜெஃப் ஹோஃப

சர்வதேச வர்த்தக மேடையில் வரலாற்றுச் சாதனை படைக்கும் இலங்கையர்: The 3i Show நிகழ்ச்சியில் பில்லியன் டொலர் கோடீஸ்வரரான தொழில்நுட்ப ஜாம்பவான் ஜெஃப் ஹோஃப

Sep 15, 2026 - 05:35 PM


காணொளி
வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

Mobitel 1278