Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
ISC Education நிறுவனத்தின் ஐந்தாவது வருடாந்த பெலாரஸ் ஒன்றுகூடல் – மாணவர்கள், குடும்பங்கள் மற்றும் வளர்ந்து வரும் மருத்துவ சமூகத்தைக் கொண்டாடும் நிகழ்வ

Sep 15, 2026 - 05:40 PM

ISC Education நிறுவனத்தின் ஐந்தாவது வருடாந்த பெலாரஸ் ஒன்றுகூடல் – மாணவர்கள், குடும்பங்கள் மற்றும் வளர்ந்து வரும் மருத்துவ சமூகத்தைக் கொண்டாடும் நிகழ்வ
Mobitel Inner 1278

ISC Education நிறுவனத்திற்கு சர்வதேச கல்வி என்பது ஒரு பல்கலைக்கழகத்திற்கான அனுமதியைப் பெற்றுக்கொடுப்பது மாத்திரம் அல்ல. மாறாக, வெளிநாட்டில் கல்வி கற்பதற்குத் தேவையான ஆரம்பகட்டக் கலந்துரையாடல்கள் முதல் பல்கலைக்கழகத்தில் சேர்த்தல், வெளிநாட்டுப் பயணம், கல்வி நடவடிக்கைகள் மற்றும் அதற்குப் பின்னரான ஆண்டுகள் வரை மாணவரின் முழுமையான பயணத்திற்கும் பொறுப்பேற்பதாகும். 

சர்வதேசக் கல்வி மற்றும் பல்கலைக்கழகத்திற்கான அனுமதியைப் பெற்றுக்கொடுக்கும் நிறுவனம் என்ற ரீதியில், ISC Education நிறுவனம் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் நேரடியாக இணைந்து, இலங்கை மாணவர்களுக்குப் பொருத்தமான சர்வதேசக் கல்வி வாய்ப்புகளை வழங்கி வருகிறது. ஆலோசனை, பாடநெறி மற்றும் பல்கலைக்கழகத் தெரிவு, விண்ணப்பச் செயற்பாடு, அனுமதிக்கான ஒருங்கிணைப்பு, விசா வழிகாட்டல், வெளிநாட்டுப் பயணத்திற்கு முன்னரான ஆயத்தப்படுத்தல்கள் உள்ளிட்ட முழுமையான மாணவ வழிநடத்தல் சேவைகள் கல்வி ஆண்டு முழுவதும் வழங்கப்படுகிறது. 

முக்கியமாக, இலங்கையை விட்டு வெளிநாடு சென்றவுடன் மாணவர்களுக்கும் ISC Education நிறுவனத்திற்கும் இடையிலான தொடர்பு முடிவுக்கு வந்துவிடுவதில்லை. வெளிநாட்டில் கல்வி கற்கும் காலத்திலும் மாணவர்களுக்கான தொடர்ச்சியான ஒத்துழைப்பு, கல்வி முன்னேற்றக் கண்காணிப்பு, நலன்புரி உதவி, வழிகாட்டுதல் மற்றும் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுடன் தொடர்ச்சியான தொடர்பு ஆகியவற்றின் ஊடாக இந்தச் சேவை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. இதன் மூலம், ISC Education நிறுவனம் மாணவர்களின் எதிர்காலத்தை தயார்ப்படுத்துவதுடன் கல்விப் பயணம் முழுவதும் அவர்களுடன் உடன் இருப்பதற்கு உதவுகிறது. 

தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டாக நடைபெற்ற வருடாந்த பெலாரஸ் பட்டதாரிகள் சங்கத்தின் கிரிக்கெட் போட்டி மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வு என்பவற்றின் ஊடாக இந்தக் கொள்கை மீண்டும் வெளிக்கொண்டுவரப்பட்டது. பெலாரஸில் உள்ள Belarusian State Medical University (BSMU) இல் மருத்துவக் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களை உள்ளடக்கிய சமூகத்தைப் பிரதிபலிக்கும் வகையில், தற்போதைய மாணவர்கள், பட்டதாரிகள், மருத்துவத் துறையினர், பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் இந்த வருடாந்த ஒன்றுகூடலில் பங்கேற்றனர். 

நிகழ்வின் முதல் கட்டமாக கிரிமண்டல மாவத்தை மைதானத்தில் வருடாந்த கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் மருத்துவ பட்டதாரிகளும் தற்போதைய மாணவர்களும் உற்சாகமான போட்டிகளில் கலந்துகொண்டனர். வருடாந்த நிகழ்ச்சித் திட்டத்தின் முக்கிய அம்சமாக மாறிய இந்தப் போட்டி, விளையாட்டுப் போட்டிக்கு அப்பால், BSMU சமூகத்தின் பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் சந்தித்து, மீண்டும் தொடர்புகளைப் புதுப்பித்து, கல்விச் சூழலுக்கு வெளியேயும் தங்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை வழங்கியது. 

மாலை நிகழ்வுகள் கொழும்பு Cinnamon Life இல் உள்ள The Studioவில் தொடர்ந்தன. மாணவர்கள், பட்டதாரிகள், மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒன்றுகூடி, சாதனைகளைக் கௌரவித்து, நட்புறவையும் சமூக ஒற்றுமையையும் கொண்டாடினர். 

மாலை நிகழ்வின் முக்கிய அம்சமாக வெள்ளை அங்கி அணிவிக்கும் (White Coat Ceremony) நிகழ்வு இடம்பெற்றது. மருத்துவக் கல்வியில் முன்னேறி வரும் மாணவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. வெள்ளை அங்கி என்பது கல்விப் பயணத்தின் முக்கியமான அடைவை மாத்திரமன்றி, எதிர்கால மருத்துவத் துறையினரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் தொழில்முறைத் தன்மை, பொறுப்பு, நேர்மை மற்றும் கருணை ஆகியவற்றையும் பிரதிபலிக்கிறது. 

பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் பங்கேற்பு இந்த நிகழ்வை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றியது. தங்களது பிள்ளைகளின் மருத்துவக் கல்விப் பயணத்தின் முக்கியமான அடைவைப் பெற்றோர் நேரடியாகப் பகிர்ந்துகொண்டனர். வெளிநாட்டில் மருத்துவம் கற்பது என்பது மாணவர் ஒருவரின் தனிப்பட்ட பயணம் மாத்திரமல்ல; முழுக் குடும்பத்தின் அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் பயணம் என்பதையும் இது வெளிப்படுத்தியது. 

மாணவர்களுடன் மாத்திரமன்றி, தங்களது பிள்ளைகளை வெளிநாட்டில் வழிநடத்துவதற்காக ISC Education நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடனும் நீண்டகால உறவைப் பேணுவது நிறுவனத்தின் அணுகுமுறையின் முக்கிய அம்சமாகும். மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் சாதனைகளைக் கொண்டாடுவதற்காக பெற்றோர், வழிகாட்டிகள் மற்றும் மருத்துவத் துறையினர் அவர்களுடன் இணைந்துகொண்டனர். 

உதவித்தொகை வழங்கும் நிகழ்வும் மாணவர் சமூகத்தில் ISC Education நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முதலீட்டை வெளிப்படுத்தியது. தற்போது 200க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் BSMU இல் கல்வி கற்று வருவதுடன், அவர்களில் அரைப்பங்கிற்கும் மேற்பட்டோர் 80 சதவீதத்துக்கும் அதிகமான கல்விச் சராசரியைப் பேணுகின்றனர். இதனால், இந்த ஆண்டுக்கான Merit மற்றும் Performance உதவித்தொகைகளுக்கான போட்டி மிகவும் கடுமையாக இருந்தது. 

சிறப்புத் திறமையுள்ள மாணவர்களிடமிருந்து 40 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. அவர்களில் பலர் 9.0க்கும் அதிகமான சராசரி மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர். விண்ணப்பதாரர்களுக்கிடையில் கல்விசார் பெறுபேறுகளில் மிகக் குறைந்த வித்தியாசங்களே காணப்பட்ட நிலையில், மதிப்பீட்டின்போது கல்விசார் தொடர்ச்சித் தன்மை, பொறுப்புகளை உரிய காலத்தில் நிறைவேற்றுதல், ISC Education உடனான ஈடுபாடு மற்றும் பரந்த மாணவர் சமூகத்திற்கு வழங்கிய பங்களிப்பு ஆகியவையும் கருத்தில் கொள்ளப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாணவர்கள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் கௌரவிக்கப்பட்டதுடன், பிரதான உதவித்தொகைகளும் வழங்கப்பட்டன. 

வருடாந்த கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து வெற்றியாளர்கள், இரண்டாம் இடம் பெற்றவர்கள், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் ஆகியோருக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. மாணவர்களின் உரைகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் அதிஷ்ட லாபச் சீட்டிழுப்பு ஆகியவை மாலை நிகழ்வை நிறைவு செய்தன. இதன் மூலம் மாணவர்கள், பட்டதாரிகள், மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் பல ஆண்டுகளாக ISC Education நிறுவனம் உருவாக்கி வரும் சமூகச் சூழலில் ஒன்றிணைந்தனர். 

ஐந்தாவது வருடாந்த பெலாரஸ் ஒன்றுகூடல், ISC Education நிறுவனத்தின் பணிகளுக்குப் பின்னால் உள்ள பரந்த கொள்கையை மீண்டும் வெளிப்படுத்தியது. சர்வதேசக் கல்வி என்பது ஒரு மாணவருக்குச் சேர்க்கைக் கடிதம் கிடைத்தவுடன் அல்லது அவர் விமானத்தில் பயணித்தவுடன் நிறைவடையும் ஒரு உறவு அல்ல. 

நேரடி பல்கலைக்கழக உறவுகள், மாணவர் அனுமதி மற்றும் விசா ஒருங்கிணைப்பு, வெளிநாட்டுப் பயணத்திற்கு முந்தைய தயார்படுத்தல், வெளிநாட்டில் தொடர்ச்சியான ஆதரவு, கல்வி முன்னேற்றக் கண்காணிப்பு, வழிகாட்டுதல் மற்றும் குடும்ப ஈடுபாடு ஆகியவற்றின் ஊடாக, ISC Education நிறுவனம் மாணவர்களின் சர்வதேசக் கல்விப் பயணம் முழுவதும் அவர்களுக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வருகிறது. அதேவேளை, மாணவர்கள், பெற்றோர், பட்டதாரிகள் மற்றும் பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த தொழில்முறை நிபுணர்களை இணைக்கும் வலுவான சமூகத்தையும் தொடர்ந்து கட்டியெழுப்பி வருகிறது. 

ISC Education நிறுவனம் பற்றி 

ISC Education நிறுவனம் என்பது வெளிநாடுகளில் கல்வி கற்க விரும்பும் இலங்கை மாணவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் சர்வதேசக் கல்வி மற்றும் பல்கலைக்கழக சேர்க்கை நிறுவனமாகும். சர்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் நேரடியாக இணைந்து செயற்படும் ISC Education நிறுவனம் மாணவர் ஆலோசனை, பல்கலைக்கழகம் மற்றும் பாடநெறித் தெரிவு, விண்ணப்பம் மற்றும் அனுமதி நடவடிக்கைகள், விசா வழிகாட்டல், வெளிநாட்டுப் பயணத்திற்கு முந்தைய தயார்படுத்தல், மாணவர் அனுமதி, வெளிநாட்டில் தொடர்ச்சியான ஆதரவு, கல்வி முன்னேற்றக் கண்காணிப்பு, வழிகாட்டுதல் மற்றும் மாணவர் நலன்புரி ஆதரவு உள்ளிட்ட முழுமையான சேவைகளை வழங்குகிறது. 

Belarusian State Medical University உடனான ISC Education நிறுவனத்தின் நீண்டகால உறவின் மூலம், இலங்கை மருத்துவ மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை உள்ளடக்கிய வளர்ந்து வரும் சமூகத்திற்கு நிறுவனம் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கல்வி கற்கும் காலம் முழுவதும் மட்டுமன்றி, அதற்குப் பின்னரும் ISC Education இன் ஆதரவு தொடர்கிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278