Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
'சிக்மா' பட ரிலீஸ்க்காக எனது தந்தை காத்திருக்கிறார்!

Sep 16, 2026 - 07:01 PM

'சிக்மா' பட ரிலீஸ்க்காக எனது தந்தை காத்திருக்கிறார்!
Mobitel Inner 1278

'சிக்மா' படத்தின் ரிலீஸுக்காகக எனது தந்தை( விஜய்) காத்திருக்கிறார். அவர் இப்போது முதலமைச்சராக இருப்பதால் அவருக்குப் பல பொறுப்புகள் உள்ளன. நான் என்ன செய்திருக்கிறேன் என்பதைப் பார்க்க அவர் மிகவும் ஆர்வமாக உள்ளார்" என ஜேசன் சஞ்சய் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். 

நடிகரும், தமிழக முதல் அமைச்சருமான விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சிக்மா. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருடன் ராஜு சுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அக்டோபர் 2 ஆம் திகதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. 

விஜய்யின் மகன் இயக்குநராக அறிமுகம் ஆகும் முதல் படம் என்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் ஜேசன் சஞ்சய், தனது தந்தை குறித்தும் நெகிழ்ச்சியாக பேசி வருகிறார். 

இந்த நிலையில், ஐதராபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஜேசன் சஞ்சய் கூறியதாவது, 

எனது தந்தை முதல்வர் ஆனதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். 'சிக்மா' படத்தின் ரிலீஸுக்காகக எனது தந்தை( விஜய்) காத்திருக்கிறார். 

எனது படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார். விளம்பரங்கள் அனைத்தும் படத்தை பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும், அவரைச் சார்ந்ததாக மாறிவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். 

இப்போது முதலமைச்சராக இருப்பதால் அவருக்குப் பல பொறுப்புகள் உள்ளன. நான் என்ன செய்திருக்கிறேன் என்பதைப் பார்க்க அவர் மிகவும் ஆர்வமாக உள்ளார்" என்று ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். 

மேலும், உங்கள் தந்தையிடம் இருந்து நீங்கள் எதை கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய், 'நேரம் தவாறாமை’ என்று பதிலளித்துள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278