Sep 16, 2026 - 06:39 PM

ரிஷிகாந்த் - அனிஷ்மா அனில்குமார் நடித்திருக்கும் ‘மொத ராத்திரி’ படம் செப்டம்பர் 18 ஆம் திகதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவான இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. ரிஷிகாந்த், அனிஷ்மாவுடன், சேத்தன், ஏ.வெங்கடேஷ், பகவதி பெருமாள், ஷெல்லி கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவும், பரத் சங்கர் இசையமைத்திருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 21 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி பரவலான வரவேற்பு பெற்றது.
இருவேறு காரணங்களால் திருமணத்தில் ஆர்வமில்லாமல் இருந்து, எதிர்பாராதவிதமாகத் திருமண பந்தத்தில் இணையும் இருவரைச் சுற்றி, ஒரே இரவில் நடக்கும் கதைதான், ’மொத ராத்திரி’ படம்.
முத்துச்செல்விக்கும் (அனிஷ்மா அனில்குமார்) மருதநாயகத்துக்கும் (ரிஷிகாந்த்) இடையே ஏற்பாடு செய்யப்படும் தடபுடலாக நடக்கும் இந்த திருமணத்தில் இருவருக்குமே விருப்பம் இல்லை. இருவருக்கும் அவரவர்க்கான காரணங்கள் உள்ளன. தன் காதலுடனுடன் திருமணம் நடப்பதற்கு முன்பே எப்படியாவது ஓடிப் போக திட்டமிடுகிறார் முத்துச்செல்வி. இதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி, முதல் படத்திலேயே தன்னை நிரூபித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். நடிகர்களின் சிறப்பான நடிப்பு, நேர்த்தியாக எழுதப்பட்ட திரைக்கதை, ரசிக்க வைக்கும் நகைச்சுவை என 'மொத ராத்திரி' குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்ற ஒரு நல்ல சினிமா.
இந்தப் படம் செப்டம்பர் 18 ஆம் திகதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.





























