Sep 15, 2026 - 05:44 PM

டிராகன்ஸ் ஓஃப் இலங்கை 2026 விருது விழாவில், ஹட்ச் ஒரு தங்க விருது, ஒரு பிளாக் டிராகன் மற்றும் ஒரு வெள்ளி விருது என மொத்தம் மூன்று விருதுகளை வென்றுள்ளது. பிராந்திய படைப்பாற்றல் மேன்மை, வியூக பிரசாரங்கள் மற்றும் வர்த்தகநாம சாதனைகளை அங்கீகரிக்கும் மதிப்புமிக்க சந்தைப்படுத்தல் தொடர்பாடல் மற்றும் விளம்பர விருது விழாவான இந்நிகழ்வில், இந்த ஆண்டில் கௌரவிக்கப்பட்ட ஒரே தொலைத்தொடர்பு வர்த்தகநாமமாக ஹட்ச் திகழ்ந்துள்ளது.
மேலும், ஹட்ச் பெற்ற மூன்று விருதுகளுக்குமான பிரசாரங்கள் அனைத்தும் TBWA\Sri Lanka உடன் இணைந்து உருவாக்கப்பட்டவையாகும். இவ்விருது வழங்கும் நிகழ்வில் முக்கிய சிறப்பம்சமாக இருந்தது, செயற்கை நுண்ணறிவின் (AI) சிறந்த பயன்பாட்டிற்காக The Roaming Hack என்ற பிரசாரத்திற்கு வழங்கப்பட்ட தங்க விருதாகும். ஹட்ச் நிறுவனத்தின் முன்னணி ரோமிங் சேவைக்காக உருவாக்கப்பட்ட இந்த பிரசாரமானது, வாடிக்கையாளர்கள் ரோமிங்கை அனுபவிக்கும் முறையை AI மூலம் மாற்றியமைத்தது. இதே பிரசாரமானது மற்றொரு விருதுப் பிரிவின் கீழ் பிளாக் டிராகன் (Black Dragon) விருதையும் வென்றது.
ஹட்ச் நிறுவனம், பிஸ்ஸுவக் மா தமாய் (HUTCH Pissuwak Ma Thamai) என்ற ஹட்ச் 15 செயலிகள் (HUTCH 15 Apps) தயாரிப்புக்கான பிரசாரத்திற்காக, சிறந்த தயாரிப்பு அறிமுகத்திற்கான வெள்ளி விருதையும் வென்றது.இந்த அங்கீகாரம், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க, தனித்துவமான தயாரிப்புச் சலுகையுடன் கூர்மையான ஆக்கப்பூர்வமான கதைசொல்லலை இணைக்கும் அத்தயாரிப்புப் பிரசாரத்தின் திறனைப் பிரதிபலிக்கிறது.
டிராகன்ஸ் ஓ ஃப் ஸ்ரீலங்கா (Dragons of Sri Lanka) விருவழங்கல் விழாவில் ஹட்ச் நிறுவனம் பெற்ற முப்பரிமாண வெற்றி , பல்வேறு வகையான வாடிக்கையாளர்களின் மத்தியில் அர்த்தமுள்ள தாக்கத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தும் பிரசாரங்களை உருவாக்குவதற்காக, தொழில்நுட்பம், ஆக்கப்பூர்வமான சிறப்பு மற்றும் வாடிக்கையாளர் நுண்ணறிவு ஆகியவற்றை இணைப்பதில் அந்த வர்த்தகநாமத்தின் வளர்ந்து வரும் வலிமையை பிரதிபலிக்கிறது.
நிறுவனம் தனது வர்த்தகச் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு சார்ந்த முடிவெடுத்தல் ஆகியவற்றிலிருந்து தொடர்ந்து நன்மைகளைப் பெற்று வரும் இந்த நேரத்தில், இந்த அங்கீகாரம் ஹட்ச் நிறுவனத்தை புதுமையையும் படைப்பாற்றலையும் இணைக்கும் ஒரு வர்த்தகநாமமாக மேலும் வலுப்படுத்துகிறது.





























