Sep 16, 2026 - 10:42 AM

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பிரபல NBC செய்தி நிறுவனத்தின் ஹெலிகொப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவத்தன்று லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நடைபெற்ற பேருந்து விபத்து ஒன்றைக் குறித்த தகவல்களை NBC செய்தி நிறுவனம் நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.
அப்போது, வான்வழியாக நேரலை காட்சிகளைப் படம் பிடித்துக் கொண்டிருந்த ஹெலிகொப்டர், எதிர்பாராதவிதமாகத் கட்டுப்பாட்டை இழந்து தரைமட்டமாகி தீப்பிடித்து நொறுங்கியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்றொருவர் மீட்கப்பட்டு, உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் தீயைக் கட்டுப்படுத்தி, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.
ஹெலிகொப்டர் நொறுங்கி விழுந்ததற்கான கரணம் என்ன என்பது குறித்து அப்பகுதி பொலிஸார்மற்றும் வான்வழி போக்குவரத்து அமைப்பினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





























