Header Logo
Vallibel FD
Selan Bank
கிழக்கு
குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணி மீண்டும் ஒத்திவைப்பு

Sep 16, 2026 - 11:35 AM

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணி மீண்டும் ஒத்திவைப்பு
Mobitel Inner 1278


குருக்கள்மடம் பகுதியில் விடுதலைப் புலிகளால் முஸ்லீம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பகுதியானது மீண்டும் மண் படிவ மாதிரி பரிசோதனைகளுக்காக அகழ்வாய்வு நடவடிக்கை மேற்கொள்ளும் முகமாக நேற்று (15) தொடக்கம் ஒரு வாரம் ஒதுக்கப்பட்ட நிலையில் ஆய்வினை மேற்கொள்ளும் நிபுனர்களின் வேண்டுகோளுக்கமைவாக குறித்த அகழ்வாய்வுப் பணிகள் எதிர்வரும் ஐப்பசி மாதம் 06 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

முன்னமே கடந்த பங்குனி 30 ஆம் திகதி தொடக்கம் குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு எந்தவித தடயங்களும் கிடைக்கப்பெறாத நிலையில் அப்பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. 

அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் குறித்த பகுதில் மேலும் சில இடங்களைச் சுட்டிக்காடி தங்கள் சொந்த செலவில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்வதற்காக அனுமதி கோரி வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குறித்த பகுதி ஸ்கேன் செய்யப்பட்டதுடன், குறித்த அறிக்கையின் பிரகாரம் நேற்று தொடக்கம் ஒரு வாரத்திற்கு அகழ்வாய்வு மேற்கொள்வதற்கான நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

அதனடிப்படையில் நேற்று அகழ்வாய்வினை மேற்கொள்ளும் தடயவியல் நிபுனர்களின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த அகழ்வாய்வுப் பணிகளை எதிர்வரும் ஐப்பசி மாதம் 06 ஆம் திகதி தொடக்கம் முன்னெடுப்பதற்கு நேற்று நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

Mobitel 1278