Header Logo
Vallibel FD
Selan Bank
கிழக்கு
சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

Sep 16, 2026 - 12:30 PM

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!
Mobitel Inner 1278

சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில் வயல் வெளிகளில் நடமாடும் காட்டு யானைகள், இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்குக் கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. 

இப்பகுதியில் அதிகரித்து வரும் யானைகளின் அச்சுறுத்தல் குறித்து அவதானம் செலுத்தும் வகையில், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேரில் சென்று சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட்டனர். 

காட்டு யானைகளின் ஊடுருவலைக் தடுக்கும் முதற்கட்ட நடவடிக்கையாக, பிரதேச சபையினால் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பெறப்பட்ட பாரிய போக்கஸ் விளக்குகள் (Focus Lights), யானைகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் ஆபத்தான இடங்களில் பொருத்தப்பட்டன. 

அத்துடன், காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் தொடர்ச்சியாகக் கண்காணித்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அப்பகுதியில் விசேட வனஜீவிகள் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை விரைவாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. 

இதனிடையே குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த காட்டு யானையொன்றை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் துரிதமாகச் செயற்பட்டு, எந்தவித பாதிப்புமுன்றிப் பாதுகாப்பாக மீண்டும் காட்டுப்பகுதிக்கு விரட்டியடித்துள்ளனர். மனித - யானை மோதலைத் தவிர்க்கும் வகையில் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட இத்துரித நடவடிக்கை, அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

Mobitel 1278