Sep 17, 2026 - 02:00 PM

விஜய்யும், சங்கீதாவும் 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளை பெற்றார்கள். சங்கீதா தனது முழு சப்போர்ட்டை விஜய்க்கு வழங்கி, சினிமாவில் வளர்வதற்கு பக்கபலமாக இருந்தார். மேலும் பல படங்களில் விஜய்க்கு காஸ்ட்யூம் டிசைனராகவும் பணியாற்றியிருக்கிறார்.
நல்லபடியாக இருந்த அவர்களுக்குள் சில வருடங்கள் முன்பு பிரச்னை ஏற்பட்டது. சங்கீதாவும் விவாகரத்து மனுவை தாக்கல் செய்திருந்தார். ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அந்த வழக்கை வாபஸ் பெற்றுவிட்டார்.
இதன் காரணமாக மீண்டும் அவர்கள் சேர்ந்து வாழவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமின்றி சமீபத்தில் லண்டனுக்கு விஜய் சென்றபோது கூட சங்கீதாவை சந்திப்பா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எந்த சந்திப்பும் நடக்கவில்லை என்றே தெரிகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் வெங்கடேஷ் தனியார் யூடியூப் சேனலில் தெரிவிக்கையில்,
"லண்டனில் விஜய்யும், சங்கீதாவும் சந்தித்துக் கொண்ட மாதிரி தெரியவில்லை. அவர் இதற்காக செல்லவில்லை. பெர்சனல் வேலையாக செல்கிறேன் என்று சொன்னால் ஏன் போகிறீர்கள் என்று யாரும் கேட்கப்போவதில்லை. அதையெல்லாம் நல்ல விஷயமாகத்தான் பார்ப்பார்கள். இன்னமும் விஜய்யும், சங்கீதாவும் சேர வேண்டும் என்றுதான் அவரது ரசிகர்கள் நினைக்கிறார்கள்" என தெரிவித்தார்.





























