Sep 18, 2026 - 10:18 AM

வடமாகாண சுகாதார, சுதேச வைத்திய மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட 184,730,000.00 ரூபா செலவில் அமையவுள்ள புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (17) நடைபெற்றது.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான திலகநாதன், நிஹால் அபேசிங்க, வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





























