Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
இலங்கையின் டயமன்ட் லீக் மற்றும் அல்டிமேட் சம்பியன் பட்டத்துடன் நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவிற்கு SLT-MOBITEL கோலாகல வரவேற்பு

Sep 18, 2026 - 05:48 PM

இலங்கையின் டயமன்ட் லீக் மற்றும் அல்டிமேட் சம்பியன் பட்டத்துடன் நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவிற்கு SLT-MOBITEL கோலாகல வரவேற்பு
Mobitel Inner 1278

SLT-MOBITEL, உலகத் தடகள அரங்கில் இலங்கைக்கு கீர்த்தி நாமத்தை ஏற்படுத்தி, நாட்டின் விளையாட்டு வரலாற்றில் ஒரு பொன்னான அத்தியாயத்தைப் படைத்துள்ள தனது வர்த்தக நாமத்தூதர் ருமேஷ் தரங்க பத்திரகேவின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடுத்தடுத்த தொடர் வெற்றிகளுக்குத் தனது பெருமிதமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. 

பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற டயமன்ட் லீக் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 89.04 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து, இந்த மதிப்புமிக்க பட்டத்தைக் கைப்பற்றிய முதல் இலங்கை தடகள வீரர் என்ற மகத்தான சாதனையைத் தொடர்ந்து, ருமேஷ் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற 'வேர்ல்ட் அத்லெடிக்ஸ் அல்டிமேட் சம்பியன்ஷிப் 2026' போட்டியில் 90.12 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து, உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு மத்தியில் முதலிடம் பிடித்து மீண்டும் ஒருமுறை உலக விளையாட்டு உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த வெற்றிகள் ருமேஷ் வெளிப்படுத்தும் உறுதிப்பாடு, ஒழுக்கம் மற்றும் சிறப்பம்சங்களை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன. 

நம்பமாக வேகப்பந்து வீச்சாளர் என்பதிலிருந்து, உலகத்தரம் வாய்ந்த ஈட்டி எறிதல் வீரராக ருமேஷ் உருவெடுத்துள்ளமை, மனஉறுதி மற்றும் இலட்சியத்தின் கதை ஆகும். ரோம், தோஹா, லொசான் மற்றும் சூரிச் ஆகிய நகரங்களில் ஈட்டிய தொடர் வெற்றிகளின் வரிசையில், அவரது இந்த டயமன்ட் லீக் மகுடம் அண்மைய சாதனையாக இணைந்துள்ளதுடன், உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர்களில் ஒருவர் என்ற அவரது இடத்தையும் உறுதிசெய்துள்ளது. 

வெற்றி வாகை சூடிய பின்னர் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு ருமேஷ் திரும்பியிருந்த நிலையில், அவருக்கு சிறப்பு உற்சாக வரவேற்பளிக்கும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கைக்கு கீர்த்தி நாமத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தமைக்காக SLT‑MOBITEL இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரியாஸ் ரஷீத், நேரில் வருகை தந்து அவரை உற்சாகத்துடன் வரவேற்றார். 

இச்செயற்பாடு, இலங்கையின் விளையாட்டு வீரர்களைக் கௌரவிப்பதில் SLT-MOBITEL கொண்டுள்ள பெருமிதத்தையும், விளையாட்டுத் திறமைகளை வளர்த்தெடுப்பதற்கான அதன் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. வர்த்தக நாமத் தூதராக அவரது இந்த வளர்ச்சி, இலங்கையின் விளையாட்டு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பம்சங்களை வெளிப்படுத்துவதற்கான SLT-MOBITEL இன் உறுதியான இலட்சியத்தைப் பிரதிபலிக்கிறது. 

உலக அரங்கில் ருமேஷின் பிரபல்யம் தொடர்ந்து விரிவடைந்து வரும் நிலையில், SLT-MOBITEL முன்னேற்றத்தையும் இணைப்புத்தன்மையையும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதுடன், சமுதாயங்கள் வளர்ச்சியடைந்து வலுப்பெறுவதற்கும் தனது ஆதரவை வழங்குகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Mobitel 1278