Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
கார் பந்தயத்தில் 2 ஆவது இடம்பிடித்த அஜித் குமார் அணி!

Sep 21, 2026 - 09:36 AM

கார் பந்தயத்தில் 2 ஆவது இடம்பிடித்த அஜித் குமார் அணி!
Mobitel Inner 1278

பார்சிலோனாவில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி 2 ஆவது இடம்பிடித்துள்ளது. 

நடிகரும், ரேசருமான அஜித் குமார் உலகளவில் நடைபெறும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அஜித் குமார் ரேசிங் அணி மற்றும் பெல்ஜியத்தை சேர்ந்த ரெட்ஆண்ட் ரேசிங் அணிகளின் கூட்டணியில், அஜித் குமாரின் குழு போட்டிகளில் பங்கேற்று வருகிறது. 

பார்சிலோனாவில் நடைபெற்ற 24 மணி நேரம் கார் பந்தயத்தில் அஜித்தின் குழுவினர் பங்கேற்றனர். 24 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும் இந்த பந்தயத்தில் அதிக தூரம் காரை இயக்குபவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர். 

பார்சிலோனா 24 மணி நேர கார் பந்தயத்தில், அஜித் குமார் ரேசிங் அணி GT3 Pro-Am பிரிவில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. பந்தயத்தின் ஒட்டுமொத்த தரவரிசையில் 5 ஆவது இடம்பிடித்தது. 

GT3 Pro-Am பிரிவில் 2 ஆம் இடம்பிடித்த வெற்றியை தொடர்ந்து, அஜித் குமார் இந்திய தேசிய கொடியை ஏந்தி கொண்டாடினார். 

அஜித் குமார் ரேசிங் அணி கார் பந்தயங்களில் கடந்த ஆண்டு அறிமுகமானது முதல் துபாய் ஆட்டோட்ரோம், இத்தாலியின் முஜெல்லோ சர்க்யூட், பெல்ஜியத்தின் சர்க்யூட் டி ஸ்பா-பிரான்கார்சாம்ப்ஸ் மற்றும் ஸ்பெயினின் சர்க்யூட் டி பார்சிலோனா - கேடலூனியா உள்ளிட்ட 24 மணி நேர கார் பந்தய தொடர்களில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றுள்ளது. 

சமீபத்தில், லண்டன் சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற கார் பந்தயத்தை தமிழக முதலமைச்சர் விஜய் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 

அந்த பந்தயத்தில் அஜித் குமார் 38 ஆவது இடத்தை பிடித்தார். இதற்கு பதிலடி தரும் விதமாக, பார்சிலோனா 24 மணி நேர கார் பந்தயத்தில் 2 ஆவது இடம் பிடித்து அஜித் குமார் ரேசிங் அணி அசத்தியுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

Mobitel 1278