Sep 22, 2026 - 03:21 PM

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் வீட்டிற்கு ஜனசெத பெரமுனவின் தலைவரும், தேரருமான பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் இன்று (22) நேரில் விஜயம் செய்து குடும்பத்தினருக்குத் தமது ஆறுதலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
கல்முனை, நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள அனோஜனின் இல்லத்திற்குச் சென்ற அக் குழுவினர், குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்ததுடன், அனோஜனைத் தண்டனையிலிருந்து மீட்பதற்காகத் தாம் முன்னெடுத்து வரும் முயற்சிகள் குறித்துத் தெளிவுபடுத்தினர்.





























