Header Logo
Vallibel FD
Selan Bank
வடக்கு
மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!

Sep 22, 2026 - 03:45 PM

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
Mobitel Inner 1278

1990 களில் இடம்பெற்றதாகக் தெரிவிக்கப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் நவம்பர் 10 ஆம் திகதியிடப்பட்டுள்ளது. 

குறித்த வழக்கு இன்று (22) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தமது சான்றுகளை சமர்ப்பித்ததுடன், மேலதிக சாட்சியங்கள் மற்றும் தடயங்களைத் திரட்டுவதற்கு மேலும் கால அவகாசம் கோரினர். 

இதேநேரம் கடந்த ஜூலை 28 ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின் போது, சம்பவம் இடம்பெற்றதாகக் தெரிவிக்கப்படும் இடம் தொடர்பான சான்றுகள் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை ஆய்வு செய்து திரட்டி சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. 

இருந்தும் மீண்டும் பொலிஸார் இன்றையதினமும் கால அவகாசம் கோரியிருந்தனர். 

இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதிக்கு மீண்டும் திகதியிடப்பட்டுள்ளது. 

இன்றைய விசாரணையின் போது வழக்காளிகள் சார்பில் சட்டத்தரணி செபமாலைமுத்து கிருஸ்னபெலினா, காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம், அதன் பிராந்திய இணைப்பாளர் த.செல்வக்குமார், வேலணை பிரதேச சபை உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் உள்ளிட்டோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். 

முன்பதாக, மண்டைதீவு சம்பவத்தில் தனது மகனை இழந்ததாகக் கூறப்படும் 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா மற்றும் சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால் கடந்த வருடம் செப்டெம்பர் 04 ஆம் திகதி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு 2025 செப்டெம்பர் 17 ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முதன்முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ
10
172ஆவது வருடாந்திர பொதுக்கூட்டத்தில், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் புதிய தலைவர், இத்தொழிற்துறையின் மறுமலர்ச்சிக்கான 5 அம்சத் திட்டத்தை முன்மொழிந்த

172ஆவது வருடாந்திர பொதுக்கூட்டத்தில், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் புதிய தலைவர், இத்தொழிற்துறையின் மறுமலர்ச்சிக்கான 5 அம்சத் திட்டத்தை முன்மொழிந்த

Sep 22, 2026 - 05:12 PM


காணொளி
அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

Mobitel 1278