Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
பல்சுவை
இரட்டை சகோதரிகளுக்கு நடந்த அதிசயம்

Sep 25, 2026 - 10:11 AM

இரட்டை சகோதரிகளுக்கு நடந்த அதிசயம்
Mobitel Inner 1278

கேரளம் மாநிலம் கோட்டயம் மாவட்டம் திருவஞ்சூரை சேர்ந்த அனில்குமார்-சூர்யா தம்பதிக்கு ஆதிரா, ஆர்யா என்ற இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர். 

அந்த சகோதரிகளுக்கு தற்போது 25 வயதாகிறது. பள்ளி படிப்பை முடித்த இருவரும் படிப்பில் ஒரே துறையை தேர்ந்தெடுத்தனர். 

அதாவது செவிலியர் படிப்பை முடித்த இருவரும், பிறகு ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் பணியாற்றினர். 

இந்தநிலையில் மண வாழ்க்கையும், இருவருக்கும் ஒரே நாளில் நடந்தது. அதாவது கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந் திகதி இரட்டை சகோதரிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது. 

கருவற்றா பகுதியை சேர்ந்த அகிலேஷ் குமாரை ஆதிராவும், மாவேலிக்கரையை சேர்ந்த சிரன் மோகனனை ஆர்யாவும் மணமுடித்தனர். 

திருமணத்திற்கு பிறகு இருவரும் தங்களது கணவருடன் வெளிநாடு சென்றனர். 

ஆதிரா கட்டாரில் உள்ள தோஹா கிளினிக்கில் தாதியாகவும், ஆர்யா ஓமானில் உள்ள ஒரு வைத்தியசாலையிலும் வேலை பார்த்தனர். 

இதற்கிடையே இருவரும் கர்ப்பம் தரித்தனர். இந்தநிலையில் கடந்த மாதம் 9-ந் திகதி இருவரும் ஒரே நாளில் சில மணி நேர இடைவெளியில் அழகான பெண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். 

குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழாவிற்காக கடந்த 20-ந் திகதி இருவரும் தங்களது கணவர் மற்றும் குழந்தையுடன் சொந்த ஊரான கோட்டயம் திருவஞ்சூருக்கு வந்தனர். 

அங்கு ஆர்யா-சிரன் மோகனன் தம்பதி மகளுக்கு நிதாரா என்றும், ஆதிரா-அகிலேஷ்குமார் தம்பதி மகளுக்கு நிவேத்யா எனவும் பெயர் சூட்டினர். 

இந்த அரிய நிகழ்வு தற்போது ஆச்சரியமாகவும் பேசுபொருளாகவும் மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மலையகத்தில் தொடரும் கனமழை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

ஹட்டன் - கொழும்பு வீதி இயல்பு நிலைக்கு திரும்பியது!

ஹட்டன் - கொழும்பு வீதி இயல்பு நிலைக்கு திரும்பியது!

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

மழையால் மலையகம் ஸ்தம்பித்தது!

மழையால் மலையகம் ஸ்தம்பித்தது!

22 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் சந்தேகம் உள்ளது!

22 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் சந்தேகம் உள்ளது!

மலையகத்தில் பலத்த காற்றுடன் கனமழை!

மலையகத்தில் பலத்த காற்றுடன் கனமழை!

விரைவில் தீர்வு!

விரைவில் தீர்வு!

யாழ். மாவட்ட சர்வமத பேரவை உருக்கம்!

யாழ். மாவட்ட சர்வமத பேரவை உருக்கம்!

இது மிகவும் மோசமான செயற்பாடாகும்!

இது மிகவும் மோசமான செயற்பாடாகும்!

Mobitel 1278