Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
பல்சுவை
ஏஐ - வீடியோவை ஈசியாக கண்டறிய வட்ஸ் அப்பில் புதிய வசதி

Sep 25, 2026 - 10:53 AM

ஏஐ - வீடியோவை ஈசியாக கண்டறிய வட்ஸ் அப்பில் புதிய வசதி
Mobitel Inner 1278

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பிட்ட வீடியோ அல்லது புகைப்படம் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டதா? அல்லது மாற்றப்பட்டதா? என்பதைப் பயனர்கள் இலகுவில் அறிந்துக் கொள்ள வட்ஸ் அப் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

வட்ஸ் அப் சேனல்களில் பகிரப்படும் புகைப்படம் அல்லது வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதா அல்லது மாற்றப்பட்டதா என்பதை இனி எளிதாகத் தெரிந்து கொள்ள முடியும். 

இதற்காக 'ஏ.ஐ. கன்டென்ட் லேபிள்' என்ற புதிய வசதியை வட்ஸ்அப் படிப்படியாக அறிமுகப்படுத்தி வருகிறது. 

இந்த வசதி அண்ட்ராய்ட் சோதனைப் பதிப்பில் குறிப்பிட்ட பயனர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஐபோன் பயனர்களுக்கான சோதனைப் பதிப்பிலும் வழங்கப்படுகிறது. 

முதற்கட்டமாக குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே இது கிடைத்துள்ளது. 

இந்த வசதி கிடைத்ததும், வட்ஸ்அப் சேனல் நிர்வாகிகள் தாங்கள் பதிவிடும் புகைப்படம், வீடியோ உள்ளிட்டவை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டிருந்தாலோ அல்லது மாற்றப்பட்டிருந்தாலோ அதற்கான 'ஏ.ஐ. கன்டென்ட் லேபிளை' சேர்க்கலாம். 

லேபிளை உறுதி செய்து சேர்த்துவிட்டால், பின்னர் அதை நீக்க முடியாது எனக் கூறப்படுகிறது. 

அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி எப்போது கிடைக்கும் என்பது குறித்து வட்ஸ்அப் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. படிப்படியாக இது விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு உள்ளடக்கம் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டதா அல்லது மாற்றப்பட்டதா என்பதைப் பயனர்கள் அறிந்து கொள்ள இந்த வசதி உதவும். 

சில நாடுகளில் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை அடையாளப்படுத்துவது சட்டப்படி கட்டாயமாக இருப்பதால், அதற்கேற்ப சேனல் நிர்வாகிகளுக்கு வட்ஸ்அப் அறிவிப்பையும் வழங்குகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

ஹட்டன் - கொழும்பு வீதி இயல்பு நிலைக்கு திரும்பியது!

ஹட்டன் - கொழும்பு வீதி இயல்பு நிலைக்கு திரும்பியது!

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

மழையால் மலையகம் ஸ்தம்பித்தது!

மழையால் மலையகம் ஸ்தம்பித்தது!

22 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் சந்தேகம் உள்ளது!

22 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் சந்தேகம் உள்ளது!

மலையகத்தில் பலத்த காற்றுடன் கனமழை!

மலையகத்தில் பலத்த காற்றுடன் கனமழை!

விரைவில் தீர்வு!

விரைவில் தீர்வு!

யாழ். மாவட்ட சர்வமத பேரவை உருக்கம்!

யாழ். மாவட்ட சர்வமத பேரவை உருக்கம்!

Mobitel 1278