Sep 25, 2026 - 01:48 PM

கிளிநொச்சி - முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துன்னாவில் பகுதியில் மாடுகளைப் பராமரிக்கும் நோக்குடன் காவலுக்காக நேற்று (24) மதியம் சென்றவர், இன்று (25) வரை வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் குறித்த பகுதிக்குச் சென்று தேடியுள்ளனர்.
இதன்போது, காட்டுயானை தாக்குதலுக்குள்ளான நிலையில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஜெயபுரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டுவில்நாடு மேற்கு, பூநகரி பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய முதியவரே இச்சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.































