Sep 28, 2026 - 01:52 PM

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சூரி நடிப்பில் படகு போட்டியை மையமாக வைத்து உருவாகி வெளிவந்த மண்டாடி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.
இந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு சிறப்பாக அமைந்துள்ளது. TTT, தாய் கிழவி, வித் லவ், கருப்பு, டிசி, பிளாஸ்ட், மொத ராத்திரி என தொடர்ந்து பல வெற்றி படங்கள் தமிழில் வெளியானது. அந்த வரிசையில், மண்டாடி திரைப்படமும் இணைந்துள்ளது.
அதுவும், 2026 ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களில் ஒன்றாகவும், 100 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்த டாப் 5 திரைப்படங்களில் ஒன்றாகவும் இடம்பிடித்துள்ளது. மேலும், சூரியின் நடிப்பில் வெளிவந்து 100 கோடி ரூபாவசூலித்த முதல் திரைப்படமும் இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மண்டாடி திரைப்படத்தின் வசூல் விவரங்களை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நாம் பார்த்து வரும் நிலையில், 18 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 18 நாட்களில் இப்படம் உலகளவில் 131 கோடி ரூபா வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.































