Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
சினிமா
“ஜெயிலர் 2” திரைப்படத்தின் இசை ஆல்ப வெளியீட்டு அறிவிப்பு!

Sep 28, 2026 - 04:39 PM

“ஜெயிலர் 2” திரைப்படத்தின் இசை ஆல்ப வெளியீட்டு அறிவிப்பு!
Mobitel Inner 1278

ரஜினியின் “ஜெயிலர் 2” திரைப்படத்தின் இசை ஆல்பம் செப்டம்பர் 30 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம், உலகளவில் 600 கோடி ரூபாவுக்கும் மேல் வசூலித்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. 

மீண்டும் ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

இப்படம் 350 கோடி ரூபா வரையிலான பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. வருகிற அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி உலகளவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் , இப்படத்திலிருந்து ‘அல்ல போலேலோ’, ‘ஒன் மூன்... ஒன் சன்’என்ற பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறன்றன. 

‘ஜெயிலர் 2’ படத்தின் இசை ஆல்பம் செப்டம்பர் 30 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.

MOST READ
03
கொமர்ஷல் வங்கியானது தேசியளவிலான கடலோரம் மற்றும் நீர்நிலைகள் தூய்மைப்படுத்தல் திட்டத்தின் ஊடாக சுற்றுச்சூழல் சார்ந்த தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்

கொமர்ஷல் வங்கியானது தேசியளவிலான கடலோரம் மற்றும் நீர்நிலைகள் தூய்மைப்படுத்தல் திட்டத்தின் ஊடாக சுற்றுச்சூழல் சார்ந்த தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்

Sep 28, 2026 - 04:51 PM

காணொளி
திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

Mobitel 1278