Sep 28, 2026 - 06:49 PM

தமிழ் சினிமாவில் 80 களில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் தான் கங்கை அமரன்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், வெங்கட் பிரபுவின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது, நன்றாக யோசிக்கிறார், படம் பண்ணுகிறார். வேறொரு படத்தை நம்பியிருந்தார், அந்தப் படம் கைகூடாத காரணத்தால் அவரது புதுப்படம் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தாமதத்திற்கு காரணமான நடிகர் யார் என்பது குறித்து நாம் குற்றம் சொல்ல வேண்டாம், அவர் நன்றாக வாழட்டும். படத்துக்கு கதை ரெடி, அமெரிக்கா சென்று அதற்கான வேலையை செய்துவிட்டார், கால்ஷீட் வாங்கியாச்சு.
ஆனால் அந்த நடிகர் வேறு இரண்டு படங்கள் நடித்துவிட்டு தான் இந்த படம் பண்ணுவேன் என்று சொல்லிவிட்டார்.
நான் வெங்கட் பிரபுவிடம் அவர் உன்னை தவிர்த்தால் நீயும் அவரை தவிர்த்துவிடு, அவருடன் படம் பண்ணாதே என்று சொல்லிவிட்டேன் என்றார்.
இந்த நிலையில் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில், சிவகார்த்திகேயன் என்னுடைய நெருங்கிய நண்பர்.
எனக்கு சகோதரர் போல. அவரைச்சுற்றி நிறைய சர்ச்சைகள் வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. ஒரு தந்தையாக உங்கள் மகனின் படம் தள்ளிப்போகும்போது விரக்தி ஏற்படுவது இயல்பு. அவருக்கு முழுமையாக என்ன நடந்து என்பது தெரியாது.
அதற்காக நான் அவரை குற்றம் சாட்டவில்லை. என் வேலை விஷயத்தில் நான் மிகவும் அமைதியானவன். அதை என் அப்பா உள்ளிட்ட யாரிடமும் நான் பகிர்ந்துகொள்வதில்லை. அந்தப் படம் பல்வேறு காரணங்களால் கைகூடவில்லை.
அவ்வளவு தான். அதில் எந்த வருத்தமும் இல்லை. நேரமும், சரியான ஸ்கிரிப்ட்டும் அமைந்தால், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றுவேன் என பதிவு போட்டுள்ளார்.































