Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
பல்சுவை
உதடு கருப்பாக இருக்கா?

Sep 29, 2026 - 10:25 AM

உதடு கருப்பாக இருக்கா?
Mobitel Inner 1278

இன்றைய காலகட்டத்தில் மாறிவரும் வாழ்வியல் முறை, போதிய தண்ணீர் குடிக்காதது, மற்றும் தரம் குறைந்த அழகுப் பொருட்களைப் பயன்படுத்துவதால் பலருக்கும் உதடுகள் தங்களின் இயற்கை நிறத்தை இழந்து கருமையாக மாறுகின்றன. 

இதனால் முகத்தின் பொலிவே குறைகிறது. கெமிக்கல் கலந்த க்ரீம்களைத் தவிர்த்து, சமையலறையில் இருக்கும் இயற்கை பொருட்களை வைத்தே மிக எளிதாக உதடுகளை ரோஸ் நிறத்திற்கு மாற்ற முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். 

உதடுகளின் கருமையைப் போக்கி, உடனடியாக இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுப்பதில் பீட்ரூட்டிற்கு நிகர் எதுவுமில்லை. பீட்ரூட்டில் உள்ள இயற்கையான நிறமிகள் உதட்டின் செல்களைப் புதுப்பிக்கின்றன. 

பயன்படுத்தும் முறை, ஒரு சிறிய துண்டு பீட்ரூட்டை நன்றாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். தினமும் இரவு தூங்குவதற்கு முன், இந்த சாற்றை உதடுகளில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இரவு முழுதும் அப்படியே விட்டுவிட்டு, காலையில் குளிர்ந்த நீரால் கழுவினால் சில நாட்களிலேயே உதடு இயற்கையாகவே சிவப்பாவதை நீங்கள் காண முடியும். 

உதடுகளில் தேங்கும் இறந்த செல்கள் தான் உதடு கருமையாகக் காட்சியளிக்க முதன்மைக் காரணம். இதனை நீக்க வாரத்திற்கு இரண்டு முறை ஸ்க்ரப் செய்வது அவசியமாகும். 

பயன்படுத்தும் முறை, அரை ஸ்பூன் சர்க்கரையுடன், சில துளிகள் சுத்தமான நெய் அல்லது வெண்ணெய் கலந்து கொள்ளவும். இந்த கலவையை உதட்டின் மீது வைத்து 2 நிமிடங்களுக்கு மென்மையாக வட்ட வடிவில் தேய்க்க வேண்டும். இது உதட்டில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, வறண்ட தோலை நீக்கி, மென்மையாக்க உதவும். 

எலுமிச்சம்பழத்தில் இயற்கையான பிளீச்சிங் பண்புகள் நிறைந்துள்ளன. தேன் உதட்டிற்குத் தேவையான ஈரப்பதத்தை வழங்கி சுருக்கங்களை நீக்குகிறது. 

பயன்படுத்தும் முறை, சம அளவு எலுமிச்சை சாறு மற்றும் சுத்தமான தேனை ஒன்றாகக் கலந்திடுங்கள். இக்கலவையை உதடுகளில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே உலர விடுங்கள். அதன் பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். எலுமிச்சை உதட்டின் கரும்புள்ளிகளை நீக்கி, தேன் உதட்டைப் பளபளப்பாக மாற்றும். 

மாதுளை பழத்தின் விதைகள் உதட்டின் நிறமியைக் கட்டுப்படுத்தி, உதடுகள் மீண்டும் கருமையாவதைத் தடுக்கிறது. பாலாடை உதட்டின் வெடிப்புகளைக் குணமாக்குகிறது. 

பயன்படுத்தும் முறை, சில மாதுளை விதைகளை நன்றாக நசுக்கி, அதனுடன் சிறிதளவு பாலாடை சேர்த்துக் குழைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உதடுகளில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். தொடர்ந்து இதைச் செய்து வந்தால், உதடுகள் பட்டுப் போல சாஃப்ட் ஆக மாறுவதுடன், நல்ல நிறத்தையும் பெறும். 

உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால், அவை எளிதில் வறண்டு கருமையாகி விடுகின்றன. பாதாம் எண்ணெயில் உள்ள வைட்டமின் - இ உதட்டிற்குப் புத்துயிர் அளிக்கிறது. 

பயன்படுத்தும் முறை, தினமும் இரவு தூங்குவதற்கு முன் இரண்டு துளிகள் தூய்மையான பாதாம் எண்ணெயை எடுத்து உதடுகளில் லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இது உதட்டின் வறட்சியைத் தடுத்து, கரிய நிறத்தை படிப்படியாகக் குறைத்து, இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுக்கும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ
02
ஜனசக்தி லைஃப், யாழ்ப்பாணத்தில் சமூக ஈடுபாட்டை வலுப்படுத்தும் வகையில் நல்லூர் திருவிழா காலத்தில் 10 நாள் சமூக அணுகல் திட்டத்தை முன்னெடுத்தது

ஜனசக்தி லைஃப், யாழ்ப்பாணத்தில் சமூக ஈடுபாட்டை வலுப்படுத்தும் வகையில் நல்லூர் திருவிழா காலத்தில் 10 நாள் சமூக அணுகல் திட்டத்தை முன்னெடுத்தது

Sep 29, 2026 - 10:49 AM


காணொளி
திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

Mobitel 1278