Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
சினிமா
பாரிஸ் ஃபேஷன் வாரத்தில் ராயல் லுக்கில் கலக்கிய ஐஸ்வர்யா ராய்!

Sep 29, 2026 - 02:50 PM

பாரிஸ் ஃபேஷன் வாரத்தில் ராயல் லுக்கில் கலக்கிய ஐஸ்வர்யா ராய்!
Mobitel Inner 1278

உலகப் புகழ்பெற்ற பாரிஸ் ஃபேஷன் வாரத்தில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது கம்பீரமான தோற்றத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தை பின்புலமாகக் கொண்டு நடைபெற்ற இந்த பிரமாண்ட ஆடை அலங்கார அணிவகுப்பில், சர்வதேச அழகு பிராண்டின் தூதராக அவர் பங்கேற்றார். 

இந்த ஃபேஷன் ஷோவில் முன்னணி ஆடை வடிவமைப்பாளர் யாரா ஷூமேக்கர் வடிவமைத்த அடர் நிற கம்பீரமான வெல்வெட் உடையணிந்து ஐஸ்வர்யா ராய் நடைபயின்றார். தனது வழக்கமான நேர்த்தியான ஸ்டைலுடன், புதிய கூந்தல் நிறத் தேர்வையும் வெளிப்படுத்தி மேடையை அலங்கரித்தார். அவரது இந்த ராயல் லுக் மற்றும் தன்னம்பிக்கையான நடை, சமூக வலைதளங்களில் ரசிகர்களின் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. 

இந்த நிகழ்வில் ஐஸ்வர்யா ராயுடன் சர்வதேசப் பிரபலங்களான கெண்டல் ஜென்னர், சிமோன் ஆஷ்லி, எவா லாங்கோரியா மற்றும் பிரபல பாடகி செலினே டியான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர். மேடையில் நடைபயின்ற நட்சத்திரங்கள் அனைவரும் இணைந்து உற்சாகமாக நடனமாடி அரங்கத்தை அதிரவைத்தனர். குறிப்பாக, மேடையில் சர்வதேச பாடகி செலினே டியானைக் கட்டிப்பிடித்து, கையோடு கை கோர்த்து ஐஸ்வர்யா ராய் நடனமாடிய கணங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

ஐஸ்வர்யா ராயின் இந்த பிரமாண்ட தோற்றத்தைக் கண்ட அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். "என்றென்றும் ராணி ஒருவர்தான்" என்றும், "உண்மையான ராயல் லுக்" என்றும் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். கான்ஸ் திரைப்பட விழாவில் தனது ஆடைத் தேர்வுகளால் கவர்த்த ஐஸ்வர்யா ராய், தற்போது பாரிஸ் ஃபேஷன் வாரத்திலும் தனது தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

Mobitel 1278