Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
சினிமா
‘ஆடை’ படத்தில் ஆடை இன்றி நடித்தது சவாலானது!

Sep 30, 2026 - 03:16 PM

‘ஆடை’ படத்தில் ஆடை இன்றி நடித்தது சவாலானது!
Mobitel Inner 1278

படப்பிடிப்பின் போது மிகக் குறைந்த அளவிலான நபர்களே தளத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டதாகவும், படக்குழுவினர் தனக்கு முழுப் பாதுகாப்பையும் வசதியையும் ஏற்படுத்தித் தந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். 

பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகை அமலா பால், தான் நடித்த 'ஆடை' திரைப்படத்தின் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும், அது தொடர்பாக எடுத்த சவாலான முடிவுகள் குறித்தும் ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். 

இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படம் 'ஆடை'. இப்படத்தில் பல காட்சிகளில் ஆடை ஏதும் இன்றி நடிக்க வேண்டிய சூழல் இருந்தது குறித்துப் பேசிய அமலா பால், இந்தத் கதையைக் கேட்டவுடன் உடனடியாக சம்மதிக்கவில்லை என்று கூறினார். 

"கதையை இயக்குநர் அணுகிய விதம், அது வெறும் விளம்பரத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறதா அல்லது கதையின் தீவிரமான உணர்ச்சியை வெளிப்படுத்தப் பயன்படுகிறதா என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு இரண்டு மாதங்கள் தேவைப்பட்டன. 

இயக்குநரையும் ஒளிப்பதிவாளரையும் முழுமையாக நம்பிய பிறகே இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்," எனத் தெரிவித்தார். 

படப்பிடிப்பின் போது மிகக் குறைந்த அளவிலான நபர்களே தளத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டதாகவும், படக்குழுவினர் தனக்கு முழுப் பாதுகாப்பையும் வசதியையும் ஏற்படுத்தித் தந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் எவ்வித சங்கடமும் இன்றி ஒரு படைப்பாக அதை செய்து முடிக்க முடிந்ததாகத் தெரிவித்தார். 

அக்காலகட்டத்தில் அத்தகைய துணிச்சலான முடிவை எடுத்தது குறித்துப் பெருமைப்படுவதாகக் கூறிய அமலா பால், ஆனால் இப்போதுள்ள சூழலில் அதே போன்ற ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பேனா என்று கேட்டால், கண்டிப்பாக மாட்டேன் என்றே தோன்றுகிறது என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். 

வாழ்க்கையிலும் திரைப் பயணத்திலும் வயது மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப முன்னுரிமைகள் மாறுவதே இதற்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

Mobitel 1278