Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
04
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் முன்னணி வரவு அட்டை வழங்குநர்களில் இடம்பிடித்த ஒரேயொரு இலங்கை நிறுவனம் என்ற வரலாற்றுச் சாதனையை கொமர்ஷல் வங்கி படைத்துள்ளது

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் முன்னணி வரவு அட்டை வழங்குநர்களில் இடம்பிடித்த ஒரேயொரு இலங்கை நிறுவனம் என்ற வரலாற்றுச் சாதனையை கொமர்ஷல் வங்கி படைத்துள்ளது

Nov 23, 2026 - 04:23 PM

06
இலங்கையில் இதழியல்துறை எதிர்காலத்தை நோக்கி பயணிக்கையில் துறையின் மதிப்பும் தரமும் உயர்ந்த வண்ணமுள்ளது: Mark and Comm இனால் இதழியல் துறையின் நிலை 2026

இலங்கையில் இதழியல்துறை எதிர்காலத்தை நோக்கி பயணிக்கையில் துறையின் மதிப்பும் தரமும் உயர்ந்த வண்ணமுள்ளது: Mark and Comm இனால் இதழியல் துறையின் நிலை 2026

Nov 23, 2026 - 04:18 PM

காணொளி
அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையில் முன்னேறிவரும் இலங்கை!

உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையில் முன்னேறிவரும் இலங்கை!

புனரமைப்பு!

புனரமைப்பு!

இந்திய நிதியுதவி இருந்தும் பலாலி, காங்கேசன்துறை அபிவிருத்தியில் இலங்கை அரசு பாராமுகம்

இந்திய நிதியுதவி இருந்தும் பலாலி, காங்கேசன்துறை அபிவிருத்தியில் இலங்கை அரசு பாராமுகம்

 யாழ் மத்திய பேருந்து நிலையக் காணியை அபகரிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்

யாழ் மத்திய பேருந்து நிலையக் காணியை அபகரிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்

மட்டக்களப்பில் மாணவி மாயமாகி 26 நாட்கள்!

மட்டக்களப்பில் மாணவி மாயமாகி 26 நாட்கள்!

ஹட்டனில் சேலை உதவியுடன் நகை உற்பத்தி நிலையத்தில் கைவரிசை

ஹட்டனில் சேலை உதவியுடன் நகை உற்பத்தி நிலையத்தில் கைவரிசை

 'கார்த்திகை வாசம்' மலர் கண்காட்சி!

'கார்த்திகை வாசம்' மலர் கண்காட்சி!

நாட்டை மீட்டெடுப்பது முக்கிய நோக்கமாகும்!

நாட்டை மீட்டெடுப்பது முக்கிய நோக்கமாகும்!

இம்ரான் கான் எங்களின் ஹீரோ!

இம்ரான் கான் எங்களின் ஹீரோ!

நான் அபிவிருத்திகளுக்குத் தடையாக இருந்ததில்லை

நான் அபிவிருத்திகளுக்குத் தடையாக இருந்ததில்லை

அந்த அறிக்கை நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்காது!

அந்த அறிக்கை நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்காது!

நீதிபதிகளின் பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்!

நீதிபதிகளின் பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்!

சர்வதேச விசாரணைக்கு பயப்படுகிறீர்களா?

சர்வதேச விசாரணைக்கு பயப்படுகிறீர்களா?

    Mobitel Inner 1278

    இந்தியாவின் கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகே மேனோன்பாறை கூராங்காடு பகுதியில் வசிப்பவர் ஜான் குமார் (வயது 36). தொழிலாளி. இவரது மனைவி நிவேத்யா (29). இவர்களுக்கு ஜெனிபர் ஜூலியட் (வயது 5) என்ற மகளும், ராபின் கிறிஸ்டோபர் (3) என்ற மகனும் உள்ளனர். ஜெனிபர் ஜூலியட் ஒரு பாடசாலையில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். 

    இந்நிலையில் ஜெனிபர் ஜூலியட், ராபின் கிறிஸ்டோபர் ஆகிய 2 பேரும் 29 ஆம் திகதி வீட்டில் விளையாடி கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் குளியலறையில் உள்ள தொட்டியில் மூழ்கி கிடந்தனர். இதையடுத்து தொட்டியில் குழந்தைகள் தவறி விழுந்து விட்டதாக கூறி நிவேத்யா சத்தம் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து குழந்தைகளை மீட்டு தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். 

    அங்கு பரிசோதனை செய்த வைத்தியர்கள், ஜெனிபர் ஜூலியட், ராபின் கிறிஸ்டோபர் ஆகிய 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    முதல் கட்ட விசாரணையில், வீட்டில் விளையாடியபோது அக்காள், தம்பி தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என கொழிஞ்சாம்பாறை பொலிஸார் சந்தேகித்தனர். பின்னர் 2 பேரின் உடல்களை பொலிஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். 

    இதுதொடர்பாக நிவேத்யாவிடம் பொலிஸார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த பொலிஸார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். 

    இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, நிவேத்யாவுக்கு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. இதற்கு இடையூறாக குழந்தைகள் இருப்பதாக கருதி உள்ளனர். இதனால் குழந்தைகளை தீர்த்துக்கட்ட நிவேத்யா முடிவு செய்தார். 

    அதன்படி, சம்பவத்தன்று ஜான்குமார் வேலைக்கு சென்ற பிறகு, வீட்டில் இருந்த குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து நிவேத்யா கொலை செய்தார். இந்த சம்பவம் வெளியே தெரியாமல் இருக்கவும், பொலிஸில் சிக்காமல் இருக்கவும் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. 

    இதையடுத்து நிவேத்யாவை பொலிஸார் கைது செய்தனர். அவரது கள்ளக்காதலனுக்கு கொலையில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.