Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
வர்த்தக சேவை தடகள சம்பியன்ஷிப்பில் தொடர்ச்சியாக 8ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்று MAS Holdings சாதனை

Oct 1, 2026 - 12:27 PM

வர்த்தக சேவை தடகள சம்பியன்ஷிப்பில் தொடர்ச்சியாக 8ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்று MAS Holdings சாதனை
Mobitel Inner 1278

இலங்கை வர்த்தக சேவை தடகளச் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த 41ஆவது வர்த்தக சேவை தடகள சம்பியன்ஷிப் தொடரில் MAS Holdings நிறுவனம் தொடர்ச்சியாக 8ஆவது ஆண்டாகவும் ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 

தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டித் தொடரில் 82 தங்கம், 99 வெள்ளி மற்றும் 72 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 253 பதக்கங்களுடன் 548 புள்ளிகளைப் பெற்ற MAS Holdings நிறுவனம், இரண்டாம் இடத்தைப் பிடித்த நிறுவனத்தை விட 242 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று, வர்த்தக சேவை தடகள சம்பியன்ஷிப் வரலாற்றில் மீண்டும் ஒரு தடவை தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. 

இதில் SLT நிறுவனம் 306 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், சம்பத் வங்கி 274 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றன. CDB Finanace நிறுவனம், 242 புள்ளிகளுடன் நான்காம் இடத்தையும், HNB வங்கி 178 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன. 

இதனிடையே, பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த மாஸ்டர்ஸ் சம்பியன், ஒட்டுமொத்த நொவீஸஸ் சம்பியன் மற்றும் ஒட்டுமொத்த சம்பியன் ஆகிய மூன்று பட்டங்களையும் MAS Holdings நிறுவனம் வென்றெடுத்ததுடன், ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்த இரண்டாம் இடத்தையும் கைப்பற்றியது. 

அதேபோல, சிறந்த தனிநபர் திறமைக்கான விருதுகளில், 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான சிறந்த தடகள வீரராக MAS Fabric Park நிறுவனத்தின் நதீற வியனகே தெரிவானதுடன், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான சிறந்த தடகள வீராங்கனையாக Bodyline 1 நிறுவனத்தின் உஷானி மதுஷிகா தெரிவானார். இதேவேளை, 338 போட்டி நிகழ்ச்சிகளைக் கொண்டதாக நடைபெற்ற இம்முறை வர்த்தக சேவை தடகள சம்பியன்ஷிப் தொடரில் 2,188 தடகள வீரர்கள் பங்கேற்றதுடன், 27 புதிய போட்டிச் சாதனைகளும் நிலைநாட்டப்பட்டன. அதுமாத்திரமின்றி, இம்முறை உலக தடகள தரவரிசைப் போட்டியாக இம்முறை போட்டித் தொடர் அங்கீகரிக்கப்பட்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

அத்துடன், வர்த்தக சேவை தடகள வரலாற்றில் முதன்முறையாக தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களும் இம்முறை போட்டித் தொடரில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

Mobitel 1278