Oct 2, 2026 - 05:35 PM

நடிகர் விஜய் நடித்த மாண்புமிகு மாணவன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் ஸ்ருதிராஜ்.
பின் சின்னத்திரை பக்கம் வந்தவர் சன் டிவியில் தென்றல் சீரியலில் நடித்து மக்களின் கவனம் பெற்றார். அதன்பின் ஆஃபிஸ், அழகு, தாலாட்டு ஆகிய சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
இப்போது சன் டிவியில் லட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். சீரியலில் நடிப்பதை தாண்டி ஸ்ருதிராஜ் சக நடிகர்களுடன் காமெடி ரீல்ஸ் செய்வது, போட்டோ ஷுட்கள் வெளியிடுவது என இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சீரியல் நடிகை ஸ்ருதிராஜ் வைத்தியசாலையில் இருந்தபடி ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
அவரது வலது காலில் சில பிரச்சனைகள் இருப்பதால் சர்ஜரி செய்துள்ளாராம், தற்போது நன்றாக இருப்பதாகவும், தனக்கு என்ன ஆனது என அக்கறையாக கேட்ட அனைவருக்கும் நன்றி என பதிவு போட்டுள்ளார்.































