Oct 2, 2026 - 06:38 PM

தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக இப்படம் அக்.16 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அக்டோபர் 15 ஆம் திகதி வெளியாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்துடனான மோதலைத் தவிர்க்கவும், தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’படத்திற்கு வழிவிடவும், வெளியீட்டை தள்ளிவைப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மலையாள சூப்பர்ஸ்டார் மமூட்டி, சாய்பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் மற்றும் நசீருதீன் ஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ஓம்.
தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ள படத்திற்கு, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.































