Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
சினிமா
பிரபல பாடகருக்கு ஓராண்டு சிறை தண்டனை!

Oct 2, 2026 - 07:36 PM

பிரபல பாடகருக்கு ஓராண்டு சிறை தண்டனை!
Mobitel Inner 1278

தென் கொரியாவைச் சேர்ந்த கே-பாப் இசைக்குழுவின், பிரபல பாடகருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது, அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்டாய இராணுவ சட்டத்தை மீறிய வழக்கில் நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவின் பின்னணி என்ன? 

தென் கொரிய சட்டப்படி உடற்தகுதி படைத்த அனைத்து ஆண்களும் குறிப்பிட்ட வயதுக்குள் குறைந்தபட்சம் 18 மாதங்கள் இராணுவத்திலோ அல்லது மாற்றுச் சமூக சேவைகளிலோ கட்டாயம் பணியாற்ற வேண்டும். அந்த வகையில் பாடகர் மின்-ஹோ, சியோலில் உள்ள சமூக சேவை மையத்தில் மாற்றுச் சேவை பணியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். 

ஆனால், பணிக்காலத்தில் எந்தவித முறையான அனுமதியும் இன்றி சுமார் 102 நாட்கள் தொடர்ந்து பணிக்கு வராமல் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டதாகக் தெரிவிக்கப்படுகிறது. 

இதனால் பாடகர் மின் - ஹோ மீது இராணுவ நிர்வாகம் சார்பில் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சியோல் மேலை மாவட்ட நீதிமன்றம், நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கட்டாய இராணுவச் சேவையை அலட்சியப்படுத்தியது கடுமையான குற்றம் என்று சுட்டிக்காட்டியது. 

இதனை அடுத்து இரு தரப்பு வாதத்தையும் கேட்ட பின்னர் வழக்கின் முடிவில், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 

நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மின்-ஹோ, தன் மீது அளப்பரிய அன்பு செலுத்திய ரசிகர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தையும் மனவேதனையையும் அளித்ததற்காகப் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். 

இருப்பினும், இந்த தண்டனையின் காரணமாக அவர் மீதமுள்ள பணிக்காலத்தை மீண்டும் நிறைவு செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளதால், அவரது கலைப்பயணம் தற்காலிகமாகப் பாதிக்கப்படும் எனக் கருதப்படுகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

Mobitel 1278