Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
கொழும்பு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்!

Oct 2, 2026 - 11:55 PM

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்!
Mobitel Inner 1278

கொழும்பு நகரைச் சுற்றியுள்ள 24 அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதிகளின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பேணுவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

 

பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு அமைவாக, கொழும்பு பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஷாந்த டி சொய்சா தலைமையில் இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

 

நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் இயங்கும் இந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

 

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நகர அபிவிருத்தி அதிகாரசபையின் (UDA) பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் தமித் திசாநாயக்க முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைய, உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துமாறு சுற்றியுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பணிப்புரை விடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

சில குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றி இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தவும், அதனால் பொதுச் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்களைத் தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதற்காக குடியிருப்புகளைச் சுற்றி புதிய பொலிஸ் காவலரண்களை நிறுவுவதற்கும், தற்போதுள்ள காவலரண்களைப் புனரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியான பொலிஸ் ரோந்துப் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

 

மேலும், குடியிருப்புப் பகுதிகளில் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இத்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு பொலிஸ் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

 

இக்கலந்துரையாடலில் கொழும்பு மத்திய மற்றும் தெற்கு பிரிவுகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

Mobitel 1278