Oct 4, 2026 - 10:04 AM

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தினியாவல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று (04) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் திறந்த பிடியாணை பிறப்பித்திருந்தது.
அதற்கு மேலதிகமாக, அவர் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று (03) இரவு தனியாவல ஆரண்ய சேனாசனத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அங்கு கைது செய்யப்பட்ட ஞானசார தேரர் நேற்றிரவே கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவிற்கு (CCD) அழைத்து வரப்பட்டார்.































