Nov 11, 2026 - 05:08 PM
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்

ஹட்டன் நகரில் இன்று (11) பிற்பகல் 2 மணிமுதல் மீண்டும் பெய்த கடும் மழை காரணமாக, பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட நகருக்கு வருகை தந்த பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
நகரில் பெய்த மழைநீர் பிரதான வீதியூடாக வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியதால், எம்.ஆர். நகரம் மற்றும் ஹட்டன் மல்லியப்பு பகுதிகளில் வாகனப் போக்குவரத்துக்குப் பெரும் இடையூறு ஏற்பட்டது.
இதேவேளை, ஹட்டன் நகரில் மழைநீர் முறையாக வழிந்தோடுவதற்காக, நீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகளை ஹட்டன் – டிக்கோயா நகர சபை தற்போது முன்னெடுத்து வருகின்றது.
































