Nov 11, 2026 - 06:23 PM

வியட்னாமிற்கான சுற்றுலாவைத் திட்டமிடுகின்றீர்களா அல்லது ஆசியாவில் விறுவிறுப்பான பயணமொன்றைப் பண்ணி சிந்தித்த வண்ணமுள்ளீர்களா? Vietjet இடமிருந்து மூன்று நாள் சேல் விற்பனை 11/11 முதல் ஆரம்பித்துள்ளது. 188 அமெரிக்க டொலர்கள் முதல் Eco டிக்கட்கள் வழங்கப்படுவதுடன், (வரிகள் மற்றும் கட்டணங்கள் அடங்கலாக), Deluxe கட்டணங்களில் 25% விலைக்கழிவுகள் வழங்கப்படுகின்றன. இலங்கையைச் சேர்ந்த பயணிகள் இந்த விசேட சலுகைகளை, கொழும்பு முதல் ஹனோய், Ho Chi Minh City மற்றும் மாலைதீவுகளுக்கான விமான சேவைகளுக்கு அனுபவிக்க முடியும்.
தற்போது முதல் 2026 நவம்பர் 21.30 வரை (இலங்கை நேரம்), பயணிகளுக்கு www.vietjetair.com அல்லது Vietjet Air app ஊடாக Eco டிக்கட்களை விசேட கட்டணத்தில் முற்பதிவு செய்து கொண்டு, 2026 டிசம்பர் 1 முதல் 2027 மே 31 வரை பயணம் செய்ய முடியும் (பயணத் திகதிகள் அவற்றின் பயணப் பகுதிகளுக்கமைய வேறுபடலாம், விதிவிலக்கான நாட்கள் பொருந்தும்). மேலதிக சௌகரியம் மற்றும் நெகிழ்ச்சித் தன்மையுடன் பயணிக்க விரும்புவோர், Deluxe கட்டணங்களில் 25% வரை விலைக்கழிவைப் பெற்றுக் கொள்ளலாம். முற்பதிவின் போது VJINT11 எனும் குறியீட்டை பயன்படுத்த வேண்டும். 2027 ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 31 வரையான காலப்பகுதிக்கு இந்தச் சலுகை பொருந்தும்.
Vietjet விமான நிறுவனம் இலங்கையில் தனது பிரசன்னத்தை விரைவாக விரிவுபடுத்தி வருவதுடன், நிறுவனத்தின் மிகவேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாக இலங்கையை மாற்றியுள்ளது. வியட்நாமிய விமான நிறுவனமான இது, Ho Chi Minh City இற்கான தனது தற்போதைய சேவைக்கு மேலதிகமாக, டிசம்பர் 2026-இல் கொழும்பு-மாலைதீவு மற்றும் பெப்ரவரி 2027-இல் கொழும்பு-ஹனோய் உள்ளிட்ட மேலும் பல வான்வழிச் சேவைகளை கொழும்பிலிருந்து தொடங்கவுள்ளது.
ஹனோயின் வரலாற்றுச் சிறப்புமிக்க வீதிகளை ஆராய்வது மற்றும் Ho Chi Minh City இன் துடிதாட்டமான சூழலை அனுபவிப்பது முதல் வியட்நாமின் கண்கவர் கடலோரப் பகுதிகள் மற்றும் உணவு வகைகளைக் கண்டறிவது வரை, சர்வதேசப் பயணிகள் தங்களின் அடுத்த வியட்நாமியப் பயணத்தைத் திட்டமிடுவதை Vietjet மேலும் எளிதாக்குகிறது. விரிவடைந்து வரும் தனது வான்வழிச் சேவைக் வலையமைப்பின் மூலம் வசதியான இணைப்புச் சேவைகளை வழங்குவதன் வாயிலாக, பயணிகள் வியட்நாமுடன் இணைந்து ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள விறுவிறுப்பான சுற்றுலாத் தலங்களையும் ஒருங்கிணைத்துப் பயணிக்க முடியும்.
விமானத்தின் உள்ளேயான பயணமும் மறக்கமுடியாத அனுபவமாக அமைகின்றது. Pho, Banh Mi மற்றும் Iced Milk Coffee போன்ற வியட்நாமியப் புகழ்பெற்ற உணவுகளுடன், சர்வதேச உணவுகளின் பலதரப்பட்ட தெரிவுகளையும் உள்ளடக்கி, புதிதாகத் தயாரிக்கப்பட்ட சூடான உணவுகளைப் பயணிகள் சுவைக்க முடியும். நட்புடனும் அர்ப்பணிப்புடனும் செயல்படும் விமானப் பணிக்குழுவினருடன் இணைந்து, 10,000 மீட்டர் உயரத்தில் நிகழ்த்தப்படும் தனித்துவமான பண்பாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள், வியட்நாமிய உபசரிப்பின் கதகதப்பையும் உணர்வையும் ஒவ்வொரு பயணத்திற்கும் கொண்டு வருகின்றன.
உங்கள் அடுத்த பயணத்தைத் திட்டமிட்டுப் பதிவு செய்யவும், Vietjet உடன் இணைந்து வியட்நாம் மற்றும் உலகை வலம் வர ஆயத்தமாகவுமான இந்த மூன்று நாள் பொன்னான வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!
Vietjet பற்றி
புதுயுக விமானச் சேவை நிறுவனமான Vietjet, வியட்நாமின் வான்வழித் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பிராந்திய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் ஒரு முன்னோடி விமானச் சேவையாகத் திகழ்ந்து வருகின்றது. செலவின முகாமைத்துவத் திறன், பயனுள்ள செயல்பாடுகள் மற்றும் செயற்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுடன், அனைத்து நடவடிக்கைகளிலும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதிய போக்குகளுக்குத் தலைமை வகிக்கும் Vietjet, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பலதரப்பட்ட சேவைகளுடன் கூடிய கட்டணச் சேமிப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை மிக்க வான்வழிப் பயண வாய்ப்புகளை வழங்குகின்றது.
Vietjet நிறுவனம், சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) செயற்பாட்டு பாதுகாப்பு கணக்காய்வு (IOSA) சான்றிதழைப் பெற்ற ஒரு முழு அளவிலான அங்கத்துவ நிறுவனமாகும். வியட்நாமின் மிகப்பெரிய தனியார் விமானச் சேவை நிறுவனமான இதற்கு, உலகின் ஒரே ஒரு பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு மதிப்பீட்டு இணையத்தளமான airlineratings.com நிறுவனத்தினால் பாதுகாப்பிற்கான மிக உயர்ந்த 7 நட்சத்திர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், Airfinance Journal இனால் தொடர்ந்து பல வருடங்களாக ஆரோக்கியமான நிதிநிலை மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட உலகின் சிறந்த 50 விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன், Skytrax, CAPA, Airline Ratings போன்ற புகழ்பெற்ற சர்வதேச அமைப்புகளினால் உலகின் 'சிறந்த குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனம்' எனவும் Vietjet பலமுறை பெயரிடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு பார்க்கவும் www.vietjetair.com
































