Nov 11, 2026 - 06:24 PM

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா மற்றும் அணித் தலைவர் குசல் மெண்டிஸ் ஆகியோரின் சிறப்பான சதங்களின் உதவியுடன் இலங்கை அணி வலுவான நிலையை எட்டியுள்ளது.
இன்றைய (11) மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 404 ஓட்டங்களைக் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் பசிந்து சூரியபண்டார (0) மற்றும் தினேஷ் சந்திமால் (13) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்த போதிலும், லஹிரு உதார (42) மற்றும் கமிந்து மெண்டிஸ் (58) ஆகியோர் அணியை மீட்கப் போராடினர்.
இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த தனஞ்சய டி சில்வா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் பாகிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொண்டு நிதானமாகவும் அதிரடியாகவும் ஓட்டங்களைக் குவித்தனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தனஞ்சய டி சில்வா 167 ஓட்டங்களுடனும், குசல் மெண்டிஸ் 117 ஓட்டங்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இவர்கள் இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டுக்காக 200க்கும் அதிகமான ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியுள்ளனர்.
முன்னதாக தமது முதலாம் இனிங்ஸில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 434 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இதற்கமைய இலங்கை அணி 30 ஓட்டங்களால் பின்னிலையில் உள்ளது.
போதிய வெளிச்சமின்மை காரணமாக இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறைவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.
































