Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
பல்சுவை
இன்று பூமிக்கு மிக அருகில் வரும் சனி கிரகம்

Oct 4, 2026 - 04:05 PM

இன்று பூமிக்கு மிக அருகில் வரும் சனி கிரகம்
Mobitel Inner 1278

நமது சூரியனை சுற்றி வரும் கிரகங்களில் 6-வதாக இருப்பது சனி கிரகமாகும். இது சூரியனில் இருந்து சுமார் 142 கோடி கி.மீ. தூரத்தில் உள்ளது. 

சனி கிரகத்தின் தனிச்சிறப்பு அதன் அழகான வளையம். சூரிய குடும்பத்தில் உள்ள பிற கிரகங்களில் காணப்படாத ஒரு தட்டையான வளையம் சனி கிரகத்தின் நடுப்பகுதியை சுற்றி உள்ளது. 

சனி ஒரு வாயுக்கோளம். அதில் கடினமான உட்பகுதி மிகச்சிறியது. அதன் காற்று மண்டலத்தில் அமோனியா உறைந்து மேகக்கூட்டங்களாக இருப்பதால், கோளின் மேற்பரப்பு முழுவதும் பனிப்பிரதேசமாகவே காணப்படுகிறது. 

நமது பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர 365 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. 

அதனை நாம் ஒரு வருடமாக கணக்கில் கொள்வது போல், சனி கிரகம் ஒரு முறை சூரியனை சுற்றிவர 29 வருடங்கள் எடுத்துக் கொள்கிறது. 

பூமி தன்னைத்தானே சுற்றிவர 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. அதே சமயம், சனி கிரகம் தன்னைத்தானே சுற்றிவர 10 மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. 

ஆண்டுக்கு ஒருமுறை சூரியன், பூமி மற்றும் சனி ஆகிய 3 கிரகங்களும் நேர்க்கோட்டில் அமையும் 'எதிர்நிலை நிகழ்வு நடக்கும். 

எதிர்நிலை நிகழ்வு என்பது சூரியன், பூமி மற்றும் சனி ஆகியவை நேர்க்கோட்டில் வரும் நிலை. அதாவது சூரியனுக்கு எதிர் திசையில் உள்ளது என்று பொருள். 

சூரிய ஒளி சனிக்கிரகத்தின் முன்பக்கத்தில் முழுமையாக படுவதால் அது வழக்கத்தை விட அதிக பிரகாசத்துடன், பெரிதாகவும் தெரியும். 

இந்த நேரத்தில் சனி கிரகம் பூமிக்கு அருகில் சுமார் 126 கோடி கி.மீ. தொலைவில் இருக்கும். பொதுவாக ஒரு ஆண்டில் ஒக்டோபர் 3 அல்லது 4-ம் திகதிகளில் மாலை சூரியன் மறையும் போது சனிக்கிரகம் வானில் உதயமாகும். 

இரவு முழுவதும் விடிய விடிய வானத்தில் பிரகாசமாக காட்சியளிக்கும். நள்ளிரவு நேரத்தில் வானின் உச்சியில் இதனை காண்பது மிக எளிது. 

வானத்தில் மின்னாமல் ஒரு பிரகாசமான மஞ்சள் நிற புள்ளியாக வெறும் கண்ணால் இதனை காண முடியும். 

தொலைநோக்கி மூலம் சனி கிரகத்தின் அழகிய வளையங்களையும், அதன் பெரிய நிலவான டைட்டனையும் தெளிவாக காணலாம். 

இன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, பொதுமக்கள் கிழக்கு வானத்தை நோக்கினால் பிரகாசமான, அசையாமல் நிலையாக தெரியும் ஒரு மஞ்சள் நிற புள்ளியை (சனி கிரகம்) காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

Mobitel 1278