Oct 4, 2026 - 10:20 PM

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் 10 நாட்களாக நடைபெற்ற 2026 சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருமளவான மக்கள் வருகை தந்திருந்ததுடன், இதற்கான உத்தியோகபூர்வ ஊடக அனுசரணையை TV தெரண வழங்கியிருந்தது.
கடந்த 10 நாட்களில் சர்வதேச புத்தகக் கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தெரண வலயத்தில் நடைபெற்ற செய்தி வாசிப்பாளர் திரைப்பரிசோதனையில் தகுதி பெற்ற பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு 'அத தெரண' செய்தி ஒளிபரப்பின் ஊடாக செய்திகளை வழங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தமை விசேட அம்சமாகும்.
25 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கண்காட்சி வளாகத்திற்கு வருகை தந்ததாக இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் அத்துல ஜயகொடி தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், இது மிகவும் வெற்றிகரமான புத்தகக் கண்காட்சியாகும். புத்தக விற்பனை 95% ஆக உள்ளதாக தற்போது எமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TV தெரண ஊடக அனுசரணை வழங்கியதால் புத்தகக் கண்காட்சிக்குப் பெரும் விளம்பரம் கிடைத்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.































