Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வடக்கு
தமிழர்களுக்கான அரசியல் தீர்வில் இந்த அரசு கள்ள மௌனம் சாதித்து வருகிறது!

Oct 5, 2026 - 10:19 AM

தமிழர்களுக்கான அரசியல் தீர்வில் இந்த அரசு கள்ள மௌனம் சாதித்து வருகிறது!
Mobitel Inner 1278

கிளிநொச்சி, இரத்தினபுரம் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மக்கள் சந்திப்பு நேற்று (04) நடைபெற்றது. 

ஆனந்தபுரம் வட்டார கரைச்சி பிரதேச சபை உறுப்பினரின் தலைமையில் நடைபெற்ற இம்மக்கள் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டார். 

தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில், 

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையிலுள்ள இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும். 

தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்பு இச்சட்டத்தை நீக்க ஆதரவு தெரிவித்துக் கையெழுத்திட்ட போதிலும், ஆட்சிக்கு வந்து இரு ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும் இச்சட்டம் நீக்கப்படவில்லை, அரசியல் தீர்வு குறித்தும் அமைதி காத்து வருகிறார். 

கடந்த செப்டம்பர் 18 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், பொலிஸாருக்கு மட்டுமின்றி இராணுவத்தினருக்கும் சந்தேக நபர்களைக் கைது செய்யவும், விசாரணையின்றித் தடுப்பில் வைக்கவும் அதிகாரங்கள் விரிவாக்கப்பட்டுள்ளன. 

இச்சட்டத்தைப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் தடுக்கப்படுகின்றன, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் நினைவேந்தல் சுடரேற்றிய பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றனர். 

இப்புதிய சட்டத் திருத்தங்கள் மற்றும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக முழுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்வதாக உரையாற்றியவர் என தெரிவித்தார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.

MOST READ
03
இலங்கையின் மிகச்சிறந்த மாம்பழச் சுவையுடைய யோகட் தயாரிப்பை அறிமுகம் செய்வதன் மூலம், சுவைமிகுந்த அனுபவத்திற்கு அம்பேவெல நிறுவனம் புதிய வரையறை தருகிறது

இலங்கையின் மிகச்சிறந்த மாம்பழச் சுவையுடைய யோகட் தயாரிப்பை அறிமுகம் செய்வதன் மூலம், சுவைமிகுந்த அனுபவத்திற்கு அம்பேவெல நிறுவனம் புதிய வரையறை தருகிறது

Oct 5, 2026 - 11:15 AM

காணொளி
தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

Mobitel 1278