Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
“பிள்ளை மடு” முதல் மருத்துவக் கல்லூரி வரை: சாதனை அளவிலான மாணவர் சேர்க்கை மலையகத் தோட்டத்துறையின் நலனில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது

Oct 5, 2026 - 10:51 AM

“பிள்ளை மடு” முதல் மருத்துவக் கல்லூரி வரை: சாதனை அளவிலான மாணவர் சேர்க்கை மலையகத் தோட்டத்துறையின் நலனில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது
Mobitel Inner 1278

பல தலைமுறைகளுக்கு முன்பு, தோட்டப்புறக் குழந்தைகளின் ஆரம்பகால வாழ்க்கை என்பது லயன் அறைகளின் ஒரு மூலையில் இருந்த சிறிய குடிசையில் கட்டப்பட்ட துணித் தொட்டில்களிலேயே தொடங்கியது. இந்தக் குடிசைகளே பிற்காலத்தில் பிள்ளை மடு என அழைக்கப்பட்டன. 

இன்று, பழைய பிள்ளை மடு முறைகளுக்குப் பதிலாக, தகுதி வாய்ந்த மற்றும் பயிற்சி பெற்ற அதிகாரிகளைக் கொண்ட, அனைத்து வசதிகளும் நிறைந்த சிறுவர் மேம்பாட்டு மையங்கள் (Child Development Centers - CDC) உருவாக்கப்பட்டுள்ளன. இவை நகரத்தில் உள்ள எந்தவொரு குழந்தையும் பெறக்கூடிய அதே அளவிலான கல்வியையும் நல்வாய்ப்புகளையும் இக்குழந்தைகளுக்கும் வழங்குகின்றன. இந்த மையங்கள் மூலம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான பராமரிப்பும், அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவும் கிடைக்கின்றன. அதேநேரத்தில், முன்பள்ளிக் கல்வி மேம்பாட்டு மையங்கள் (Early Childhood Development Centers - ECD) விளையாட்டு வழிக் கல்வி மூலம் முறையான ஆரம்பக் கற்றலுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதுடன், வேலை செய்யும் தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டுவதற்கான பிரத்யேக இடங்களையும் வழங்குகின்றன. 

இந்த மையங்கள், பிராந்திய தோட்ட நிறுவனங்கள் (RPCs), இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) உள்ளிட்ட தோட்டத்துறையின் முக்கிய தொழிற்சங்கங்களின் கூட்டு முயற்சியால் உருவானவை ஆகும். இத்தரப்பினர் அனைவரும் இணைந்து 1992 ஆம் ஆண்டில் தோட்டத் தொழிலாளர் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை (Planters’ Human Development Trust - PHDT) என்ற முத்தரப்பு அமைப்பை நிறுவினர். அதன் பின்னர், 22 பிராந்திய தோட்ட நிறுவனங்களிலும் (RPCs) குறிப்பிடத்தக்க பல வளர்ச்சிப் பணிகளுக்கு அவர்கள் பங்களிப்பு செய்துள்ளனர். 

இந்தச் சிறுவர் மேம்பாட்டு மையங்களை (CDC) பராமரிப்பதற்காக, பிராந்திய தோட்ட நிறுவனங்கள் (RPCs) அனைத்தும் இணைந்து ஆண்டுதோறும் சுமார் 72 கோடி ரூபாய் (ரூ. 720 மில்லியன்) செலவிடுகின்றன. இது, குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் தோட்டத் தொழிலாளர் சமூகங்களின் நலனுக்காக இத்துறை தொடர்ந்து முதலீடு செய்வதைக் காட்டுகிறது. இந்த வலுவான அடித்தளம் அவர்களின் தொடர்ச்சியான கல்வி மற்றும் ஆரோக்கிய வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதுடன், நீண்ட கால நோக்கில் அவர்கள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) மற்றும் உயர் தர (A/L) பரீட்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து முன்னேறவும் உதவுகிறது. 

இன்றுவரை, தோட்டத் தொழிலாளர் சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளின் முன் பள்ளிச் சேர்க்கை 100%-ஐ எட்டியுள்ளது. அதே நேரத்தில், சுமார் 2% முதல் 3% வரையான மாணவர்கள் உள்ளூர் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரம், தோட்டத் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 250 பிள்ளைகள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளனர். இது இத்துறையில் இதுவரை பதிவான மிக அதிக எண்ணிக்கையாகும். இவர்களில், Strathspey எஸ்டேட்டைச் சேர்ந்த ஒரு இளைஞரும் அடங்குவார். அவர் தற்போது கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவராகப் பயிற்சி பெற்று வருகிறார். நான் அடைந்துள்ள இந்த வெற்றி அனைத்தும் எனது பெற்றோரின் அயராத உழைப்பினால் கிடைத்த நேரடி விளைவுதான் என்று கூறிய அவர், தனது ஆசிரியர்களுக்கும், பள்ளிப் படிப்பை முடிக்க உதவிய புலமைப் பரிசிலுக்கும் நன்றி தெரிவித்தார். மாணவர்களின் தனியுரிமைக்கான திட்டத்தின் நிலையான நடைமுறைக்கு இணங்க, அந்த மாணவரின் பெயர் விபரம் வெளியிடப்படவில்லை. 

தோட்டத் தொழிலாளர் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை (PHDT), பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனமம் மற்றும் ஏனைய தொழிற்துறை பங்காளிகளுடன் இணைந்து முன்னெடுத்துள்ள Roots to Wings எனும் பல்கலைக்கழக ஆரம்பக்கட்ட புலமைப்பரிசில் திட்டத்திலும் இந்த மாற்றம் மிக வலுவாக வெளிப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் திறமையான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவதையும், பின்னர் தங்களின் திறமைக் குறைவினால் அல்லாமல், ஒரு மடிக்கணினி, புத்தகங்கள் அல்லது பல்கலைக்கழக வளாகத்திற்கு கண்ணியமாகச் செல்வதற்கான முறையான ஆடைகளைக் கூட வாங்க முடியாமல் அந்த வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் இருப்பதையும் நாங்கள் கண்டோம் என PHDT அமைப்பின் பணிப்பாளர் நாயகம் லால் பெரேரா விளக்கினார். இந்த நிலையை மாற்றுவதற்காக, கவனமாக ஆய்வு செய்த பின்னர், மிகவும் அவசரமான இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு திட்டத்தை நாங்கள் உருவாக்கினோம். பல்கலைக்கழகப் படிப்பைத் தொடங்குவதற்கான ஆரம்பக்கட்டச் செலவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதேநேரத்தில், பிராந்திய தோட்ட நிறுவனங்கள் (RPCs) தங்களது பிரதம நிறைவேற்று அதிகாரிகள் (CEOs) ஊடாக அந்த மாணவர்கள் தங்களது பட்டப்படிப்பை முடிக்கும் வரை அவர்களுக்கான ஆதரவை உறுதி செய்கின்றன. ஒரு பெற்றோர் ஓய்வுபெறும்போது அந்த குடும்பத்திற்கு தோட்ட வீட்டு வசதி இல்லாமல் போனால் கூட, அது பிள்ளையின் பட்டப்படிப்பை நிறுத்திவிட நாங்கள் அனுமதிப்பதில்லை. மாணவர்களுக்கு கால அவகாசம் நீடிக்கப்படுவதுடன், தேவைப்படும் இடங்களில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் மானியங்களின் ஒரு பகுதி ஆதரவுடன் RPC நிறுவனங்கள் புதிய வீடுகளையும் வழங்குகின்றன. ஒரு பிள்ளை பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுவிட்டால், எந்தவொரு சூழ்நிலையிலும் அந்த வாய்ப்பு பறிபோகாமல் இருப்பதை உறுதி செய்வது எங்களது கடமை என நாங்கள் கருதுகிறோம்” என அவர் குறிப்பிட்டார். 

இந்தத் திட்டம் வெறும் நிதியுதவி என்பதையும் தாண்டி, கண்ணியம், தொடர்ச்சி மற்றும் நம்பிக்கை தரும் ஒரு வாழ்வாதாரமாக மாறியுள்ளது. சிறந்த எதிர்காலத்தைத் திசைதிருப்பக்கூடிய மறைமுகமான தடைகளைக் களைவதன் மூலம், தோட்டத்துறையைச் சேர்ந்த திறமைகள் வீணாகாமல், அவை நாளைய தலைவர்களாக வளர்த்தெடுக்கப்படுவதை Roots to Wings உறுதி செய்கிறது. இது கூட்டுப் பொறுப்பிற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகும்; இங்கு இத்தொழில்துறையின் பங்காளிகள் அனைவரும் இணைந்து இளைஞர்களின் லட்சியங்களைப் பாதுகாப்பதுடன், அவர்களின் பலவீனங்களை நல்வாய்ப்புகளாகவும், சூழ்நிலைகளைச் சாதனைகளாகவும் மாற்றுகின்றனர். 

இத்தொழில்துறையின் பல்வேறு பங்காளர்களின் நிதியுதவியுடன், இத்திட்டத்திற்கு ஆண்டுதோறும் அண்ணளவாக 10 முதல் 15 மில்லியன் இலங்கை ரூபாய் வரை செலவிடப்படுகிறது. 2024 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான மாணவர் அணியில், கலைத்துறையில் 35 மாணவர்களும், வணிகம் மற்றும் நிர்வாகத்துறையில் 22 மாணவர்களும், நாடகம் மற்றும் அரங்கியல் துறையில் 13 மாணவர்களும், உயிரியல் அமைப்புகள் துறையில் 10 மாணவர்களும், இசைத்துறையில் 7 மாணவர்களும், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்துறையில் (ICT) 6 மாணவர்களும், மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளில் தலா நான்கு மாணவர்களும், பொறியியல் தொழில்நுட்பத்துறையில் 3 மாணவர்களும், சட்டத்துறையில் இரு மாணவர்களும், ஏனைய பீடங்களில் 24 மாணவர்களும் கல்வி பயில்கின்றனர். PHDT அமைப்பின் இலக்குக்கு உட்பட்ட பகுதிகளில் எழுத்தறிவு விகிதம் 40% இலிருந்து 84%ஆக உயர்ந்துள்ள தோட்டங்களில், ஒரு காலத்தில் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒரு கல்விப் பரவலாக இது அமைந்துள்ளது. ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் தோட்ட நிர்வாகத்திற்கான இளங்கலை அறிவியல் கௌரவப் பட்டம் (BSc Hons in Plantation Management), தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனத்தின் (NIBM) தொழிற்பயிற்சிகள் மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் (OUSL) மூலமான டிஜிட்டல் கற்றல் போன்ற பிரத்யேகப் பட்டப்படிப்பு வழிகளும் தொழிற்பயிற்சி வாய்ப்புகளும் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை வழங்கி அவர்களை மேலும் பலப்படுத்தியுள்ளன. 

1992 ஆம் ஆண்டு முதல் சனத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மற்றும் குடும்ப சுகாதார பணியகம் ஆகியவற்றுடன் இணைந்து கண்காணிக்கப்பட்ட சுகாதார புள்ளிவிபரங்களின்படி, பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் 1,000 பிறப்புகளுக்கு 18.3 என்ற நிலையிலிருந்து 4.65 ஆகக் குறைந்துள்ளது. 

அதேபோல, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 42.6 இலிருந்து 6.26 ஆகக் குறைந்துள்ளது. ஒரு காலத்தில் 100,000 பிறப்புகளுக்கு 150 ஆகக் மிக உயர்வாக இருந்த பிரசவ கால தாய்மார்களின் இறப்பு விகிதம், மிக அண்மைய புள்ளிவிபரங்களின்படி பூச்சியத்திற்கு நெருங்கிக் குறைந்துள்ளது. மேலும், பிறக்கும்போதே குழந்தை இறக்கும் வீதம் 1,000 பிரசவங்களுக்கு 40 என்ற நிலையிலிருந்து இன்று 5 க்கும் குறைவாகக் குறைந்துள்ளது. தற்போது அனைத்து பிரசவங்களுமே மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பை தற்காலத்தில் அனைத்து தாய்மார்களும் பெறுகின்றனர். அத்துடன், ஒவ்வொரு குழந்தையும் தனது முதல் வருடத்திற்கான தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுக்கொள்கிறது. தோட்டப்பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட வீதிகள், வீடமைப்பு வசதிகள், நலன்புரி சேவைகள் மற்றும் நோய் தடுப்பு சுகாதார நடவடிக்கைகள் ஆகியவற்றின் காரணமாகவே இந்த மகத்தான முன்னேற்றங்கள் சாத்தியமாகியுள்ளன. 

இதேபோல் ஊட்டச்சத்து ஆதரவும் படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளது. ஒப்பந்தக்காரர்களால் வழங்கப்படும் உணவுப் பொதிகளுக்குப் பதிலாக, பெற்றோர்களே தயாரித்து வழங்கும் மதிய உணவு முறையை நோக்கி இந்த மையங்கள் மாறியுள்ளன. Dessford தோட்டத்தில் மத்திய நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சமையலறை மாதிரித் திட்டம் பரீட்சார்த்தமாகத் தொடங்கப்பட்டுள்ளதுடன், இரண்டாவது சமையலறை வசதியை Holyrood தோட்டத்தில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், சிறிய வயதுக் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை என்பது இன்னும் தொடர்ச்சியான முதலீடுகள் தேவைப்படும் ஒரு முக்கியப் பகுதியாகவே இருப்பதாக அதிகாரிகள் ஒப்புக்கொள்கிறார்கள். 

சுகாதார மேம்பாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், குறிப்பாக பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் அடைந்துள்ள வெற்றி மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பிராந்திய தோட்ட நிறுவனங்களின் (RPCs) தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதுடன், கல்வி புலமைப்பரிசில் திட்டங்கள் மூலம் கல்வித்துறைக்கு வழங்கப்படும் ஆதரவு வரையிலும் நீண்டுள்ளது. இந்தத் திட்டங்கள், ஏற்கனவே நடைமுறையிலுள்ள மருத்துவ மற்றும் கல்வி ஆதரவு அமைப்புகளுடன் இணைந்து, தோட்டத் தொழிலாளர் சமூகங்களைச் சேர்ந்த பிள்ளைகள் மற்றும் குடும்பங்களின் நல்வாய்ப்புகளையும் அவர்களின் வாழ்க்கைத்தர முன்னேற்றத்தையும் மேம்படுத்த பெரிதும் பங்களிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ
07
இலங்கையின் மிகச்சிறந்த மாம்பழச் சுவையுடைய யோகட் தயாரிப்பை அறிமுகம் செய்வதன் மூலம், சுவைமிகுந்த அனுபவத்திற்கு அம்பேவெல நிறுவனம் புதிய வரையறை தருகிறது

இலங்கையின் மிகச்சிறந்த மாம்பழச் சுவையுடைய யோகட் தயாரிப்பை அறிமுகம் செய்வதன் மூலம், சுவைமிகுந்த அனுபவத்திற்கு அம்பேவெல நிறுவனம் புதிய வரையறை தருகிறது

Oct 5, 2026 - 11:15 AM


காணொளி
தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

Mobitel 1278