Oct 5, 2026 - 11:43 AM

கன்னட திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரச்சிதா ராம், கடந்த 03 ஆம் திகதி அன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனையொட்டி அவர், தனது ரசிகர்களுடன் நள்ளிரவில் கேக் வெட்டினார். இதில் பலர் பங்கேற்று ரச்சிதாவுடன் புகைப்படம் எடுத்தனர்.
அப்போது சில ரசிகர்கள், ரச்சிதாவின் கன்னத்தை கிள்ளியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பேசிய ரச்சிதா ராம்,
தனது ரசிகர்கள் அன்பை வெளிப்படுத்தவே அவ்வாறு செய்தனர் என்றார். தமிழில் கூலி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ரச்சிதா ராம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.































