Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
இந்தியா
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு!

Oct 5, 2026 - 12:00 PM

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு!
Mobitel Inner 1278

தமிழக மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அனல் பறந்த இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. நாளை (06) இடைத்தேர்தல் நடக்கிறது. 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), எஸ்.ஜெயக்குமார் (பெருந்துறை), பி.சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), டாக்டர் சி.விஜயகுமார் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோர் தங்கள் பதவியை இராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் ஐக்கியமானார்கள். 

சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை இராஜினாமா செய்தார். எனவே 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. 

இதற்கிடையே திருச்சி கிழக்கு. கரூர், பெருந்துறை, விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பித்தது. இதனால் இந்த 5 தொகுதிகளை தவிர்த்து, மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் நாளை இடைத்தேர்தல் நடக்கிறது. 

கடந்த சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தற்போது த.வெ.க. வேட்பாளராக களத்தில் உள்ளார். இந்த தொகுதியில் பரந்தாமன் (தி.மு.க.). கணிதா சம்பத் (அ.தி.மு.க.), சுகந்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ஜானகிராமன் (நாம் தமிழர் கட்சி) உள்பட மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய சத்தியபாமா த.வெ.க வேட்பாளராக களம் காண்கிறார். இந்த தொகுதியில் சுகன்யா (தி.மு.க.). பானுமதி (அ.தி.மு.க.), லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட்), கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) உள்பட 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த 2 தொகுதியிலும் 5 முனை போட்டி நிலவுகிறது. 

த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான விஜய், 'ரோடு ஷோ' மூலமாகவும், பிரசார கூட்டங்கள் வாயிலாகவும் 'விசில்' சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். இதேபோன்று த.வெ.க.வை சேர்ந்த அமைச்சர்கள் தொகுதியில் முகாமிட்டு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். கூட்டணி கட்சி தலைவர்களும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டனர். 

தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் பொதுக்கூட்டங்கள், 'ரோடு ஷோ' மூலம் 'உதயசூரியன்' சின்னத்துக்கு வாக்குகள் திரட்டினார். எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வேன் பிரசாரத்தில் ஈடுபட்டு தொகுதிகளை சுற்றி வலம் வந்தார். 

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தீவிர வேன் பிரசாரத்தில் ஈடுபட்டார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக்கூட்டங்கள், வாகனம் மூலம் பிரசாரம் மேற்கொண்டார். அதே போன்று தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் ஆகியோரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். 

இந்த 2 தொகுதிகளிலும் அனல் பறந்த இடைத்தேர்தல் பிரசாரம் நேற்று (04) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. பிரசாரம் முடிந்தவுடன் இந்த 2 தொகுதிகளும் தேர்தல், பொலிஸ் அதிகாரிகள் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக கொண்டு வரப்பட்டது. வெளியூரை சேர்ந்தவர்கள் தொகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலம் உத்தரவிடப்பட்டது. 

எனவே பிரசாரம் முடிந்தவுடன் இந்த 2 தொகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களில் வெளியூரை சேர்ந்தவர்கள் யாரேனும் தங்கி இருக்கிறார்களா? என்று பொலிஸார் சோதனை மேற்கொண்டனர். இந்த 2 தொகுதிகளில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளுக்கு நேற்று முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணப்பட்டுவாடா நடக்கிறதா? என்பதை கண்காணிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இடைத்தேர்தலையொட்டி மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடி மையங்களும், தாராபுரம் தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலையொட்டி இந்த 2 தொகுதிகளுக்கும் நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

Mobitel 1278