Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
கல்வியியல் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப் புதிய திருத்தம்?

Oct 5, 2026 - 01:47 PM

கல்வியியல் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப் புதிய திருத்தம்?
Mobitel Inner 1278

இலங்கை ஆசிரியர் சேவையில் கல்வியியல் பட்டதாரிகளை  இணைத்துக்கொள்வதில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், புதிய ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பில் திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இது தொடர்பான கலந்துரையாடல், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் கல்வி அமைச்சில் ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது. 

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மற்றும் அரச சேவை ஆணைக்குழுவின் வழிகாட்டல்களுக்கு அமைய குறித்த சேவைப் பிரமாணக் குறிப்புத் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. 

குறித்த சேவைப் பிரமாணக் குறிப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட உடனேயே, கல்வியியல் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் இதன்போது தெரிவித்தார். 

இதற்கிடையில், ஆசிரியர் பயிற்சி, தேசிய கல்வியியல் கல்லூரிகளின் அபிவிருத்தி மற்றும் ஆசிரியர், அதிபர் உள்ளடங்கலாக ஆறு சேவைகளின் தொழில்சார் தரத்தை உயர்த்துவதற்காக 'கல்வித் தொழில்சார் பேரவை' (Education Professional Council) ஒன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் இதன்போது தெளிவுபடுத்தினார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

Mobitel 1278