Oct 5, 2026 - 11:41 PM

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக இந்த வாரத்திற்குள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்பார்க்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று (05) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
இதன்படி, இந்த வாரம் சபாநாயகருக்கு மிகவும் தீர்மானமிக்கதாக அமையும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.































