Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
பிரபல எழுத்தாளரும், அரசியல்வாதியான ஜெஃப்ரி ஆர்ச்சர் காலமானார்

Oct 6, 2026 - 06:15 AM

பிரபல எழுத்தாளரும், அரசியல்வாதியான ஜெஃப்ரி ஆர்ச்சர் காலமானார்
Mobitel Inner 1278

பிரபல எழுத்தாளர் மற்றும் முன்னாள் அரசியல்வாதியான ஜெஃப்ரி ஆர்ச்சர் தனது 86 வயதில் காலமானார். 

தனது ஐந்து தசாப்த கால எழுத்து வாழ்க்கையில், 'கிளிஃப்டன் க்ரோனிக்கிள்ஸ்' (Clifton Chronicles) மற்றும் 'கேன் அண்ட் ஏபல்' (Kane and Abel) உட்பட 300 மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்களை ஆர்ச்சர் விற்றுள்ளார். 

மேலும், தனது நாவல்களின் கதைக் களத்தை பெரும்பாலும் தனது சொந்த ஊரான சொமர்செட்டில் உள்ள வெலிங்டனிலேயே அவர் அமைத்திருந்தார். 

எழுத்துப் பணிகளுக்கு இடையே, அவர் தனது வீட்டில் "திடீரெனவும் அமைதியாகவும்" காலமானதாக ஆர்ச்சரின் பதிப்பாளரான ஹார்பர்காலின்ஸ் (HarperCollins) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான இவர், 'டெய்லி ஸ்டார்' நாளிதழுக்கு எதிராக 1987 இல் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் பொய் கூறியமை மற்றும் ஏமாற்றியது நிரூபிக்கப்பட்டதை அடுத்து, 2001 ஆம் ஆண்டு போலிச் சாட்சியம் அளித்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். 

ஆர்ச்சர் 1940 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி வடக்கு லண்டனில் பிறந்தார். 

1969 ஆம் ஆண்டில், லிங்கன்ஷயரில் உள்ள லூத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக ஆர்ச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

கன்சர்வேடிவ் கட்சியின் துணைத் தலைவராகப் பதவியேற்பதற்கு முன்பு, அவர் ஐந்து ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராகப் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

Mobitel 1278